தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனராக பெயரெடுத்த இயக்குனர் சங்கர் இப்பொழுது தன்னுடைய மூத்த மகள் ஐஸ்வர்யா கல்யாண பிசியில் இருந்து வருகிறார். மே 1ஆம் தேதி நடக்க இருந்த அந்த கல்யாணமும் ஏதோ பிரச்சனையில் தள்ளி போய்க்கொண்டே இருக்கிறது.
இதற்கிடையில் சங்கர் தமிழ் சினிமாவில் நிறைய அடி வாங்கி உள்ளார். ஏற்கனவே வடிவேலுடன் ஏற்பட்ட தகராறில் மனவருத்தத்தில் இருந்தார். அது ஒரு பக்கம் போய்க் கொண்டு இருக்கையிலேயே இந்தியன் 2 பட பிரச்சனை. அந்த படம் ஆரம்பித்ததிலிருந்தே சங்கருக்கு நிறைய பிரச்சினைகள் வந்தவண்ணம் இருந்து கொண்டே இருந்தது.
இந்தியன் 2 படத்தில் விபத்து, கமலுடன் மனக்கசப்பு என்று பல பிரச்சினைகளை சந்தித்த அவர் இனிமேல் தமிழ் வேண்டாம் என்று தெலுங்கு பக்கம் சென்று விட்டாரா என்பது ஒரு கேள்விக்குறியாக இருக்கிறது. ஆனால் நம்பத்தகுந்த வட்டாரங்கள் இந்த பிரச்சினையில் இருந்து சிறிதுகாலம் விடுபட்டு வரலாம் என்று அங்கே சென்று நிம்மதியாக இருந்து வருகிறார் என்று கூறி வருகின்றனர்.
இதுவரை தமிழ் ஹீரோக்களை மட்டுமே பயிற்று படத்தை இயக்கிக் கொண்டிருந்த சங்கர் முதன்முதலாக பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் மகன் ராம் சரணை வைத்து படம் இயக்கும் முயற்சியில் ஈடுபட்டு தீவிரமாக அதற்கான வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். இந்தப் படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது .
ராம் சரணுக்கும் இந்த படம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. ராம் சரணின் ஆர்ஆர்ஆர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஆச்சாரியார் படம் படுதோல்வியை சந்தித்ததால் சங்கருடன் கூட்டு சேர்ந்து ஏற்ற இறக்கத்தை சரி செய்ய முயற்சிக்கிறார். சங்கரும் கமிட்டாகும் தமிழ்படங்களில் தொடர்ந்து பிரச்சினையை சந்தித்துக் கொண்டிருந்ததால் தெலுங்கு ரசிகர்களை மகிழ்விக்க முடிவெடுத்துவிட்டார்.
‘சொப்பனத்தில் கண்ட அரிசி சோற்றுக்கு ஆகுமா?’ என இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு எப்போது துவங்கப் போகிறது என தமிழ் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தாலும், சங்கர் தெலுங்கு பக்கம் திரும்பியதால் ராம் சரணின் படத்தை முடித்துவிட்டுத்தான் இந்தியன் 2 திரைப்படத்தில் கவனம் செலுத்துவார்.