சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள்மோகன் மற்றும் பலர் நடிப்பில் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் டான். இப்படத்தின் வெற்றிக்கு பலர் உறுதுணையாக இருந்தாலும் இதில் நடித்த இரண்டு கதாபாத்திரங்கள் படத்திற்கு இன்னும் வலு சேர்த்துள்ளது.
சிவகார்த்திகேயனுக்கு அப்பாவாக நடித்துள்ள சமுத்திரக்கனி அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளார். எல்லா மிடில் கிளாஸ் தந்தை போலவே சமுத்திரகனியும் தனது மகன் இன்ஜினியராக வேண்டும் என பொறியியல் படிப்பில் சேர்கிறார். ஆனால் சிவகார்த்திகேயனுக்கு சும்மாவே படிப்பு வராத நிலையில் பொறியியல் படிப்பு மிகவும் மோசமாக மாறுகிறது.
இயல்பாக ஒரு தந்தை எப்படி நடந்து கொள்வாரோ அதேபோல் சமுத்திரகனி நடித்த ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார். குறிப்பாக ஒரு காட்சியில் சிவகார்த்திகேயனிடம் அவரது அம்மா உன் அப்பாவின் பாதங்களை பார்த்து இருக்கியா என கேட்கும் போது இறந்து கிடக்கும் தனது அப்பாவின் பாதத்தை சிவகார்த்திகேயன் பார்க்கும் காட்சி ரசிகர்களின் மனங்களை உலுக்குகிறது.
அதேபோல் டான் படத்தில் சமுத்திரக்கனிக்கு இணையான மற்றொரு கதாபாத்திரம் ப்ரொஃபஸர் பூமிநாதன். அவர்தான் நம்ம எஸ் ஜே சூர்யா. பூமிநாதனின் கண்டிப்பு சிவகார்த்திகேயனை மேலும் கடுப்பு ஏற்றுகிறது. படிப்பை விடவும் ஒழுக்கம்தான் ஒரு மனிதனுக்கு முக்கியம் என்பதை உணர்த்த முற்படுகிறார் எஸ் ஜே சூர்யா.
மேலும் தனது தனித்துவமான நடிப்பின் மூலம் இவரும் ரசிகர்களை கவர்ந்துள்ளார். கடைசிவரை சிவகார்த்திகேயன் முப்பது ஆரியரை முடிக்கும்வரை கூடவே இந்த கதாபாத்திரத்தையும் மிக அருமையாக கொண்டுவந்துள்ளார் இயக்குனர் சிபிசக்கரவர்த்தி.
இவ்வாறு ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் செதுக்கி இருந்தாலும் சமுத்திரக்கனி மற்றும் எஸ் ஜே சூர்யாவின் கதாபாத்திரங்கள்தான் படத்திற்கு தூணாக அமைந்தது. மேலும் இப்படம் நேர்மையான விமர்சனங்களை பெற்று வருவதால் வசூல் ரீதியாக நல்ல லாபம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.