திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

குறைந்த சம்பளத்தில் தயாரிப்பாளர்களை வளைத்துப் போடும் 18 வயது நடிகை.. கைவசம் இத்தனை படங்களா!

தமிழ் படங்களில் நடிக்க பல ஹீரோயின்கள் வந்து போனாலும் நிலையான இடத்தைப் பிடிப்பது சிலரே. ஒரு காலத்தில் திரிஷா, ஜோதிகா போன்றவர்கள் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வந்தனர். இப்பொழுது நயன்தாரா, சமந்தா தமிழ் சினிமாவை ஆட்சி செய்து வருகின்றனர்.

ஆனால் இவர்களுக்கு போட்டியாக தமிழ் சினிமா மார்க்கெட்டில் பல ஹீரோயின்கள் வந்து கொண்டிருக்கின்றனர். பிரியங்கா மோகன், பிரியா பவானி சங்கர், ராஷ்மிகா மந்தனா, பூஜா ஹெக்டே, மாளவிகா மோகனன் போன்றவர்கள் அடுத்த இவர்களுக்கு போட்டியாக அடுத்த ரவுண்டுக்கு ரெடி ஆகிக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால் இந்த நடிகைகளுக்கு எல்லாம் போட்டியாக இளம் பேரழகில் நடிகை கீர்த்தி ஷெட்டி, தமிழ் சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்திருக்கிறார். இவர் ஏற்கனவே ஹிந்தியில் ‘சூப்பர் 30’ என்ற படத்திலும், தெலுங்கில் ‘உப்பெனா’ என்ற படத்திலும் நடித்து, முதல் படத்திலேயே ஹிட் கொடுத்ததால் அடுத்தடுத்து இவருக்கு பல வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கிறது.

அதாவது நந்தா, பிதாமகன் படத்திற்குப் பிறகு 18 வருடங்கள் கழித்து மீண்டும் சூர்யாவை வைத்து அவருடைய 41-வது படத்தை இப்பொழுது பாலா இயக்கிக் கொண்டிருக்கிறார். அதில் கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடித்து வருகிறார் . இவருக்கு வயது 18 தான் ஆகிறது.

இவரைப் பற்றி நிறைய பாசிட்டிவ் செய்திகள் வந்துகொண்டே இருக்கிறது. படப்பிடிப்பு தளத்தில் அனைவரும் நன்றாக பழகுகிறார். அழகாக இருக்கிறார். 18 வயதில் இவ்வளவு பொறுமையாக இருப்பது, அனைவரும் பெருமைப்படும் வகையில் நடந்து கொள்கிறாராம்.

கீர்த்தி ஷெட்டி தமிழ் சினிமாவில் அடுத்த ரவுண்டு வருவார். இவர் இப்பொழுதே 3 படங்கள் கையில் வைத்திருக்கிறாராம். மற்ற ஹீரோயின்களே வயிற்றெரிச்சல் ஏற்படும் அளவிற்கு இவரை அனைவரும் படப்பிடிப்பு தளத்தில் புகழ்ந்து வருகின்றனர்.

Trending News