வில்லேஜ் குக்கிங் சேனலில் பங்கேற்கும் கமல்ஹாசன்.. விக்ரம் படத்தில் இந்த விஷயம் இருக்கா

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமலஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள விக்ரம் படத்திற்காக இயக்குனர் பல விஷயங்களை மெனக்கெட்டு செய்துள்ளார். இப்படத்தின் டிரைலர் வெளியாகி இருக்கும் போதே அதை நம்மால் யூகிக்க முடிகிறது.

மேலும் லோகேஷ் கமலின் தீவிர ரசிகர் என்பதால் ஒவ்வொரு காட்சியையும் அப்படி செதுக்கியுள்ளார். இப்படம் வருகிற ஜூன் 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்போதே இப்படத்திற்கான பிரமோஷன் வேலைகள் தொடங்கிவிட்டது.

இந்நிலையில் பிரபல யூடியூப் சேனல் ஆன வில்லேஜ் குக்கிங் சேனலில் கமலஹாசன் மற்றும் லோகேஷ் இருவரும் பங்கு பெற உள்ளனர். தமிழ் யூடியூப் சேனல்களில் முதல் முறையாக வில்லேஜ் குக்கிங் சேனல் தான் ஒரு கோடி சப்ஸ்கிரைப் பெற்றது. ஏனென்றால் இவர்களுடைய சமையலுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர்.

மேலும் ராகுல் காந்தி தமிழ்நாட்டில் பிரச்சாரம் செய்த போது வில்லேஜ் குக்கிங் சேனல் உடன் இணைந்து சமைத்தார். அந்தவகையில் தற்போது விக்ரம் படத்தின் புரமோஷனுக்காக கமலும் இந்த சேனலில் சமைக்கயுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சேனலில் இருப்பவர்கள் விக்ரம் படத்தில் இடம்பெறும் கல்யாண காட்சியில் பிரியாணி சமைப்பவர்கள் ஆக நடித்துள்ளனர். மேலும் இந்த சேனலில் வழக்கமான வசனமான அல்வேஸ் வெல்கம்ஸ் யூ என்ற வசனமும் விக்ரம் படத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் விக்ரம் படம் வெளியாக இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில் மிக விரைவில் கமல் கலந்துகொண்ட அந்த வீடியோ வில்லேஜ் குக்கிங் சேனலில் வெளியாக உள்ளது. இதனால் இப்போது இருப்பதை விட இவர்களது யூடியூப் சானலுக்கு அதிக சப்ஸ்கிரிபர்ஸ் வரவும் வாய்ப்புள்ளது.