புதன்கிழமை, ஜனவரி 15, 2025

அவசரப்படும் கமல்.. பணத்தேவைகள் அதிகமாகியதால் என்ன செய்வது என தெரியாமல் முழிக்கும் ஆண்டவர்

கமல் சமீபத்தில் நடித்து முடித்த படம் விக்ரம். இந்த படம் ஜூன் 3 அன்று ரிலீசாக இருக்கிறது. இந்நிலையில் கமல் அவசரஅவசரமாக பல திட்டங்களைத் தீட்டி வருவது மட்டுமல்லாமல் அதற்காக இரவும் பகலும்மாய் உழைத்துக் கொண்டிருக்கிறாராம்.

தன்னுடைய பழைய ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தை புதுப்பித்து, அதன் மூலம் பல படங்களை தயாரிக்க இருக்கிறார். தினமும் ஆழ்வார்பேட்டை அலுவலகத்தில் புது புது இயக்குனர்களை சந்தித்து கதை கேட்டு வருகிறார்.

அடுத்தபடியாக சிவகார்த்திகேயனை வைத்து தன்னுடைய ராஜ்கமல் நிறுவனத்திற்கு ஒரு படத்தை தயாரிக்கவிருக்கிறார். ஏற்கனவே கொம்பன் முத்தையா, ஆர்யா காம்பினேஷனில் ஒரு படத்தை தயாரிக்கவிருந்து அது கைவிடப்பட்டது. இப்படி பல படங்களை தயாரிக்க முன்வருகிறார்.

அதுமட்டுமின்றி அடுத்த ஆண்டு இறுதிக்குள் குறைந்தது ஏழு, எட்டு படங்களில் நடித்து விட வேண்டும் என்று ஒரு பெரிய திட்டத்தை கையில் எடுத்திருக்கிறார். இதற்குக் காரணம் அவருக்கு நிறைய பண தேவைகள் இருக்கிறதாம். அது எதற்காக என்று தெரியவில்லை, ஒருவேளை மருதநாயகம் ப்ராஜக்டை ஆரம்பிக்க போகிறாரா என்பதும் ஒரு கேள்விக்குறியாக இருக்கிறது.

இந்நிலையில் அடுத்தடுத்து 6 படங்கள் கையில் வைத்திருக்கிறார். பா ரஞ்சித் இயக்கும் ஒரு படம். லோகேஷ் கனகராஜ் உடன் அடுத்த படம் என்று அடுத்த ஆண்டுக்குள் எப்படியும் 6 படங்களையும் நடித்து ரிலீஸ் பண்ணியே ஆக வேண்டும் என்ற முடிவில் இருக்கிறார்.

இதையெல்லாம் செயல்படுத்திய ஆகவேண்டுமென்று அமெரிக்கா சென்று உடம்பை கனகச்சிதமாக மாற்றும் வேலையில் வேறு இறங்கியுள்ளார். கமலின் இந்த அறிவிப்பை கேட்ட ரசிகர்கள் பயங்கர உற்சாகத்தில் இருந்து வருகின்றனர்.

Trending News