கூலாக விஷயத்தை போட்டு உடைத்த உதயநிதி.. கடும் வேதனையில் இருக்கும் சிவகார்த்திகேயன்

சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டான் திரைப்படம் தற்போது வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது. படத்தைப் பார்த்த ரசிகர்கள் முதல் திரைப் பிரபலங்கள் வரை அனைவரும் தற்போது படக்குழுவினரை பாராட்டி வருகின்றனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூட சிவகார்த்திகேயனுக்கு போன் செய்து படம் பற்றி வெகுவாக பாராட்டியதாக செய்திகள் வெளிவந்தது. இந்நிலையில் சிவகார்த்திகேயனின் வரவிருக்கும் திரைப்படங்கள் குறித்து ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.

அதில் அடுத்ததாக அவருடைய நடிப்பில் அயலான் திரைப்படம் வெளிவர இருக்கிறது. அதை தொடர்ந்து அவர் தற்போது எஸ்கே 20 திரைப்படத்தில் படு பிசியாக நடித்துக்கொண்டிருக்கிறார். மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் ரசிகர்களுக்கு ஆச்சரியம் தரும் வகையில் நிறைய சர்ப்ரைஸ்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்டார். அப்போது அவர் எதார்த்தமாக சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தின் தலைப்பு மாவீரன் என்று தெரிவித்தார். இந்த செய்தி மீடியாவில் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டு வந்தது.

தற்போது இதை நினைத்து சிவகார்த்திகேயன் மிகுந்த மன வருத்தத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது அவர் தன்னுடைய அடுத்த படத்தின் தலைப்பை மிகவும் பிரம்மாண்டமாகவும் சர்ப்ரைசாகவும் ரசிகர்களுக்கு அறிவிக்க வேண்டும் என்று திட்டமிட்டு இருந்தார்.

ஆனால் தற்போது அந்த படத்தின் தலைப்பு வெளியாகி விட்ட காரணத்தால் அவர் என்ன செய்வது என்ற யோசனையில் இருக்கிறார். மேலும் படத்தின் தலைப்பை மாற்றி விடலாமா என்ற எண்ணமும் அவருக்கு இருக்கிறதாம். இப்படி அவர் ஒன்று நினைக்க வேறொன்று நடந்து விட்டதால் எனக்கு மட்டும் ஏன் இப்படி பிரச்சனைகள் வருகிறது என்று அவர் தனக்கு நெருக்கமானவர்களிடம் வேதனையுடன் தெரிவித்ததாக கூறப்படுகிறது.