யாரும் செய்யாத விஷயத்தை செய்த சிவகார்த்திகேயன்.. இதை செய்யறதுக்கு ஒரு மனசு வேணும்

சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவில் பலரும் திரும்பிப் பார்க்கும் அளவுக்கு அசுர வளர்ச்சியில் முன்னேறிக் கொண்டிருக்கிறார். டாக்டர், டான் போன்ற படங்கள் 100 கோடிக்கு மேல் வசூலித்து அவரை வேற லெவலுக்கு கொண்டு சென்றுள்ளது.

இந்த வெற்றியால் அவர் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலரையும் பின்னுக்குத் தள்ளியுள்ளார். அந்த வகையில் விஜய், அஜித் இவர்களுக்கு பிறகு சிவகார்த்திகேயன் தான் என்று சொல்லும் அளவுக்கு அவர் வளர்ந்துள்ளார்.

இந்நிலையில் அவர் சத்தமில்லாமல் செய்த ஒரு விஷயம் தற்போது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. சிவகார்த்திகேயன் நடிப்பு மட்டுமல்லாமல் தயாரிப்பு, பாடுவது, பாடல் எழுதுவது போன்ற பல துறைகளிலும் தன்னுடைய திறமையை காட்டி வருகிறார்.

அந்த வரிசையில் இவர் கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் போன்ற திரைப்படங்களுக்கு பாடல் எழுதி இருக்கிறார். அப்படி பாடல் எழுதுவதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை இவர் கவிஞர் நா முத்துக்குமார் குடும்பத்திற்கு கொடுத்து வருவதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் எண்ணற்ற பாடல்களை நமக்கு கொடுத்த நா முத்துக்குமார் கடந்த 2016 ஆம் ஆண்டு உடல்நலக் குறைவால் திடீரென மரணமடைந்தார். இது ஒட்டு மொத்த தமிழ் சினிமாவுக்கு ஏற்பட்ட பெரிய இழப்பாக பார்க்கப்பட்டது. சில காலம் அவரை பற்றி பலரும் பேசி வந்தாலும் அதன் பிறகு அவரை அனைவரும் மறந்து போய்விட்டனர்.

ஆனால் சிவகார்த்திகேயன் அவருடைய குடும்பத்திற்கு இப்படி ஒரு உதவியை யாருக்கும் தெரியாமல் செய்து வருகிறார். இதுகுறித்து அவரிடம் கேட்டதற்கு நான் முத்துக்குமார் சாரின் தீவிர ரசிகன். அதனால்தான் என்னால் முடிந்த உதவியை நான் அவர்கள் குடும்பத்திற்கு செய்து வருகிறேன்.

இதை நான் விளம்பரத்திற்காக செய்யவில்லை என் மனசாட்சிப்படி செய்கிறேன் என்று அவர் தெரிவித்திருக்கிறார். பல நாட்களாக இந்த விஷயம் யாருக்கும் தெரியாத நிலையில் தற்போது வெளிவந்துள்ள இந்த செய்தியால் ரசிகர்கள் பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்.