தனுஷுடன் கைகோர்க்கும் சிவகார்த்திகேயன் பட நடிகை.. முதல் முறையாக இணையும் ஜோடி

தனுஷ் தற்போது முழு வீச்சாக தன்னுடைய பட வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். நானே வருவேன், திருச்சிற்றம்பலம், வாத்தி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான மாறன் படம் எதிர்பார்த்த அளவு போகவில்லை. தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் புதிய படத்தில் தனுஷ் இணைந்துள்ளார்.

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வெளியான ராக்கி, சாணிகாகிதம் படங்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில் அருண் மாதேஸ்வரன் தனுஷ் கூட்டணியில் உருவாகும் படத்திற்கு தற்போது கேப்டன் மில்லர் என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்படத்தில் சிவகார்த்திகேயன் பட நடிகை பிரியங்கா அருள்மோகன் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. டாக்டர், டான் படங்களை தொடர்ந்து தற்போது தலைவர் 169 படத்தில் பிரியங்கா அருள்மோகன் நடிக்க உள்ளார் என்ற தகவல் அண்மையில் வெளியாகியிருந்தது.

தற்போது தனுஷுடன் கேப்டன் மில்லர் படத்தில் ப்ரியங்கா அருள்மோகன் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் கூடிய விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ தகவலை படக்குழு வெளியிடும் என கூறப்படுகிறது.

இதனால் முதல்முறையாக தனுஷ், பிரியங்கா அருண் மோகன் கூட்டணியை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர். மேலும் சமீபகாலமாக தனுஷின் படம் ஓடிடியில் வெளியாகி வந்த நிலையில் கேப்டன் மில்லர் படம் திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது கூறப்படுகிறது.

இந்நிலையில் தனுஷ் நடிப்பில் வெளியான தி கிரே மேன் படம் ஜூலை 22 ஆம் தேதி நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இப்படத்தைத் தொடர்ந்து செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள நானே வருவேன் படம் விரைவில் வெளியாக உள்ளது. அதேபோல் திருச்சிற்றம்பலம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.