புதன்கிழமை, ஜனவரி 15, 2025

அசால்டாக 65 லட்சம் மதிப்புள்ள காரை தட்டிச் சென்ற பிரபலம்.. படுகுஷியில் கார்த்தி பட நடிகை

தற்போது சினிமாவில் உள்ள பிரபலங்கள் வேறு தொழில்களில் முதலீடு செய்வதன் மூலம் பணம் சம்பாதித்து வருகின்றனர். இது ஒரு பக்கம் இருக்க பெரிய நிறுவனங்கள் தங்களது பொருட்களை நடிகைகள் மூலம் விளம்பரப்படுத்துகின்றனர். இதனால் அவர்களது ரசிகர்களும் இந்த பொருட்களை வாங்க அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர்.

இதற்காக அந்த நடிகைகளுக்கு பெரிய நிறுவனங்கள் பல லட்சங்களை கொட்டிக் கொடுக்கிறது. அந்த வகையில் தற்போது கார்த்தி பட நடிகை ஒரு காரை விளம்பரப்படுத்துவதற்காக அந்த காரை பரிசாக கொடுத்து உள்ளது ஒரு பெரிய நிறுவனம்.

கன்னட படத்தின் மூலம் அறிமுகமான கேத்ரின் தெரசா பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியான மெட்ராஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படத்தில் அவருடைய நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.

இதைத்தொடர்ந்து விஷாலுடன் கதகளி, ஆர்யாவுடன் கடம்பன் என தொடர்ந்து தமிழ் படங்களில் கவனம் செலுத்தி வந்தார். இந்நிலையில் தற்போது தமிழில் கடைசியாக அருவம் என்ற படத்தில் நடித்துள்ளார். தற்போது உடல் எடை அதிகமானதால் கேத்ரின் தெரசாவுக்கு படவாய்ப்புகள் குறைந்துள்ளது.

இந்நிலையில் Kia EV6 என்ற வெள்ளை நிற சொகுசு காரை விளம்பரப்படுத்துவதற்காக கேத்ரின் தெரசாவுக்கு இலவசமாக இந்த காரை கொடுத்துள்ளனர். இந்த காரின் விலை 65 லட்சமாம். காரின் அருகே நின்று கேத்ரினா கைப் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

தற்போது அவரது ரசிகர்கள் இந்த புகைப்படத்தை பார்த்த வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் படவாய்ப்புகள் இல்லை என்றால் என்ன இது போன்ற விளம்பரங்களில் நடித்தாலே பலமடங்கு சம்பாதிக்கலாம் என்ற குஷியில் கேத்ரின் தெரசா உள்ளார்.

 catherine Tresa
catherine Tresa

Trending News