சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தொடர்ந்து பல பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்த உலக சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளார். இந்நிலையில் ரஜினி நடிப்பில் கடைசியாக வெளியான அண்ணாத்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் அவரது ரசிகர்கள் வசூல் ரீதியாக படத்தை வெற்றியடையச் செய்துவிட்டனர்.
தற்போது ரஜினி நெல்சன் இயக்கத்தில் தலைவர் 169 படத்தில் நடிக்கவுள்ளார். இந்நிலையில் ரஜினி போன்றே ராகவேந்திரா பக்தரானவர் நடிகர் ராகவா லாரன்ஸ். பல மேடைகளில் ரஜினி தனது குருநாதர் என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் சமீபத்தில் ரஜினியின் மூத்த மகளான ஐஸ்வர்யா இயக்கத்தில் லாரன்ஸ் நடிக்க உள்ளார் என்ற தகவலும் வெளியானது.
இந்நிலையில் தன் தலைவனை போல லாரன்ஸ் படமும் 100 கோடி வசூலைத் தாண்டியுள்ளது. லாரன்ஸ் இயக்கி, நடித்த காஞ்சனா படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கியிருந்தார். நகைச்சுவை கலந்த பேய் படமாக வெளியான காஞ்சனா-2 படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இப்படம் 100 கோடி வசூலை எட்டிய நிலையில் இப்படத்தின் அடுத்த பாகமான காஞ்சனா 3 படம் 2019 இல் வெளியாகி அதுவும் 100 கோடி தாண்டி வசூல் சாதனை படைத்தது. இந்நிலையில் ரஜினியின் 9 படங்கள் 100 கோடி வசூலைத் தாண்டி உள்ளது. அந்த வகையில் ஷங்கர், ரஜினிகாந்த் கூட்டணியில் உருவான சிவாஜி, எந்திரன், 2.0 ஆகிய மூன்று படங்கள் வசூலில் வேட்டையாடியது.
பா ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான காலா, கபாலி படங்களும் 100 கோடி வசூலைத் தாண்டியது. மேலும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான பேட்ட மற்றும் ஏ ஆர் முருகதாஸின் தர்பார் படமும் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.
இந்நிலையில் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான அண்ணாத்த படமும் வசூலை வாரி குவித்தது. இவ்வாறு தொடர்ந்து ரஜினியின் படங்கள் வசூல் சாதனை படைத்து வருகிறது. இதனால் பெரிய நடிகர்கள் கூட ரஜினியின் படம் வெளியாகும்போது படத்தை ரிலீஸ் செய்ய பயப்படுகிறார்கள்.