புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

சின்னத்தம்பி பட நந்தினியாக மாறிய குஷ்பூவின் புகைப்படம்.. 51 வயசுனா நம்புற மாதிரியே இல்ல

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான குஷ்பு வருஷம் 16 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். அப்போது படு ஸ்லிம்மாக இருந்த நடிகைகளை ஓரம் கட்டிவிட்டு ரஜினி, கமல், பிரபு, சத்யராஜ் போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக குஷ்பு நடித்து வந்தார்.

பெரும்பாலும் பிரபு, குஷ்பூ இணைந்து நடித்த படங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. ரசிகர்களால் முதன்முதலில் நடிகை ஒருவருக்கு கோவில் கட்டப்பட்டது என்றால் அது குஷ்புக்கு தான். மேலும் இட்லிக்கு குஷ்பூ இட்லி என்று ரசிகர்கள் பெயர் வைத்தனர்.

மேலும் வெள்ளித்திரையில் மட்டுமல்லாமல் சின்னத்திரை தொடர்களிலும் குஷ்பூ நடித்திருந்தார். இந்நிலையில் சமீபத்தில் செம ஸ்லிமாக மாறி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி இருந்தார். மேலும் தன்னுடைய இளமைக் காலத்தில் வாங்கிய உடைகளை தற்போது அணிந்து எனக்கு இப்போது பிட்டாக இருப்பதாக புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.

கடைசியாக ரஜினி நடிப்பில் வெளியான அண்ணாத்த படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் குஷ்பூ நடித்திருந்தார். இந்நிலையில் தனது மூத்த மகள் அவந்திகா சுந்தர் லண்டனில் தனது நடிப்பு பயிற்சியை முடித்துவிட்டு சினிமாவில் தனது பயணத்தை தொடங்க உள்ளார் என அறிவித்தார்.

இதனால் குஷ்பு ரசிகர்கள் மீண்டும் சின்ன குஷ்பு சினிமாவில் வலம் வர இருக்கிறார் என கமெண்டுகள் போட்டு வந்தனர். இந்நிலையில் குஷ்பு லண்டனில் எடுத்த புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் 20 வயது குறைத்துக்கொண்டு தற்போது தன் மகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில் அதே அழகுடன் உள்ளார்.

ஒவ்வொரு வருடமும் வயது அதிகமாகும்போது அழகு குறையும் என்பார்கள். ஆனால் குஷ்புக்கு வருடங்கள் போகப்போக அழகு மேலும் கூடிக்கொண்டே போகிறது. இந்நிலையில் இப்போதும் குஷ்பு கதாநாயகியாக நடிக்கலாம் என சில ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

kushboo
kushboo

Trending News