திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

கார்த்திக்கு முன்பே பட்டத்தை வென்ற உலகநாயகன்.. இது என்ன புது உருட்ட இருக்கு

பாரதிராஜாவின் அலைகள் ஓய்வதில்லை படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் நவரச நாயகன் கார்த்திக். இவர் வருடத்திற்கு குறைந்தது 5 முதல் 6 படங்களாவது கொடுத்து வந்தார். மேலும் கார்த்திக் ஒரே மாதிரியான கதையை தேர்ந்தெடுக்காமல் வித்தியாசமான கதையை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார்.

கார்த்திக் படங்களில் அதிக நகைச்சுவை காட்சிகளும் இடம் பெற்றிருந்தது. இந்நிலையில் இதுவரை நவரச நாயகன் என்றால் அது கார்த்திக் தான் என்று காலகாலமாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் இவருக்கு முன்னதாகவே நவரச நாயகன் பட்டத்தை ஒரு நடிகர் பெற்றுள்ளார்.

ஆரம்பத்தில் அந்த நடிகர் படங்கள் வெளியாகும்போது நவரச நாயகன் என்று குறிப்பிட்டிருந்தனர். ஆனால் அதன் பிறகு அந்த அடைமொழியை ஏன் நீக்கி விட்டார்கள் என்பது தெரியவில்லை. அதாவது உலக நாயகன் கமலஹாசனின் பெயர்தான் ஆரம்பத்தில் நவரச நாயகன் என அழைத்தனர்.

கமலின் படங்கள் வெள்ளி விழா காணும் போது நவரச நாயகன் என்ற டைட்டில் கார்டு போடப்பட்டது. அதன் பின்பு பழம்பெரும் நடிகரான முத்துராமனின் மகன் என்ற அடையாளத்துடன் வந்த கார்த்திக்கு நவரச நாயகன் பட்டம் கொடுக்கப்பட்டது.

ஒரே பட்டதுடன் இருவர் பெயர் இருந்தால் குழப்பம் வரும் என்பதால் அதன் பின்பு கமலஹாசனின் நவரச நாயகன் என்ற டைட்டில் நீக்கப்பட்டதாம். ஆனால் இதை அறிந்த ரசிகர்கள் இதெல்லாம் நம்பற மாதிரியா இருக்கு என கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

ஆனாலும் தற்போது வரை ஒரு நவரச நாயகனாக தான் கமல் வலம் வந்து கொண்டிருக்கிறார். மேலும் தற்போதும் அதே எனர்ஜியுடன் விக்ரம் படத்தில் பணியாற்றியுள்ளார். அதுமட்டுமல்லாமல் நவரச நாயகன் பட்டம் போனாலும் உலகநாயகன் என்ற பட்டத்தை ரசிகர்களால் கமலஹாசன் பெற்றுள்ளார். மேலும் அவரது ரசிகர்கள் அன்புடன் ஆண்டவர் என்றும் கமலை அழைக்கின்றார்கள்.

Trending News