ரோலக்ஸ் மிரட்டிய அந்த 20 நிமிஷ காட்சி.. விக்ரம் வசூல் வேட்டைக்கு முக்கிய புள்ளி இவர்தான்

கடந்த சில நாட்களாக எங்கு பார்த்தாலும் விக்ரம் படத்தின் பேச்சுதான். விக்ரம் படத்தில் போஸ்டர் மற்றும் புரமோஷன் நிகழ்ச்சி படத்தின் எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தது. இந்நிலையில் விக்ரம் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி பாராட்டுகளை பெற்று வருகிறது.

லோகேஷ் கனகராஜ் கைதி, மாஸ்டர் படங்களைத் தொடர்ந்து விக்ரம் படத்தின் மூலம் மீண்டும் தனது திறமையை நிரூபித்துள்ளார். லோகேஷ் சரியான நடிகர்களை தேர்ந்தெடுத்து அதற்கேற்றார்போல் வலுவான கதாபாத்திரத்தை கொடுத்து அசத்தியுள்ளார்.

இந்நிலையில் கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக விக்ரம் படத்தின் படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில் இப்படத்தில் சூர்யா கேமியோ தோற்றத்தில் நடித்து இருப்பதை படக்குழு சஸ்பென்சாக வைத்திருந்தது. ஆனால் சில நாட்களுக்கு முன்பு இந்த செய்தி இணையத்தில் கசிந்தது.

அதனால் விக்ரம் படத்தின் ட்ரைலரில் சூர்யா இடம்பெற்றிருந்த காட்சி வைக்கப்பட்டிருந்தது. தற்போது சூர்யா, பாலா இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இதைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிக்க உள்ளார்.

இப்படங்களுக்காக காத்திருந்த சூர்யா ரசிகர்களுக்கு விக்ரம் படம் மிகப்பெரிய விருந்து அளித்துள்ளது. கமலஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகியோரை போல விக்ரம் படத்தில் சூர்யாவுக்கும் ரோலக்ஸ் என்ற வலுவான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருந்தது.

விக்ரம் படத்தில் திடீரென சூர்யாவின் என்ட்ரி ரசிகர்களுக்கு உற்சாகப்படுத்தியது. நீண்ட தாடியுடன் வித்தியாசமான கெட்டப்பில் மாஸாக உள்ளார் சூர்யா. மேலும் இவர் நடித்த 20 நிமிட காட்சி திரையரங்கமே அதிரச் செய்தது. இது போன்ற கதாபாத்திரத்தில் சூர்யா துணிந்து நடிப்பதற்கு தனி தைரியம் வேண்டும் என பலரும் பாராட்டி வருகின்றனர்.