யாரும் யோசிக்காத விஷயத்தை பேசிய லோகேஷ்.. பெருசு எல்லாம் தயவு செஞ்சு கத்துக்கோங்க

ரசிகர்களின் உழைப்புக்கு எங்களது உழைப்பெல்லாம் கிட்ட கூட நெருங்க முடியாது என இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பேட்டி ஒன்றில் கூறியுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், உலகநாயகன் கமல்ஹாசனின் நடிப்பில் உருவான விக்ரம் திரைப்படம், சமீபத்தில் திரையரங்குகளில் ரிலீசாகி பட்டையை கிளப்பி வருகிறது. இதனிடையே எந்த ஒரு இயக்குனரும் பேசாத விஷயத்தை லோகேஷ் கனகராஜ் பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.

அதில், நாங்கள் இயக்குனர்களாக வரும்போது சில காலங்கள் கஷ்டப்பட்டு, திரைப்படங்களை இயக்கி ஹிட் கொடுத்ததற்கு பின், கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கி நாங்கள் செட்டில் ஆகி விடுவோம் ஆனால் எங்களுடைய படத்தை பார்க்க வரும் ரசிகர்கள் 100 ரூபாய், 200 ரூபாய், 500 ரூபாய் என தாங்கள் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை கொண்டு வந்து டிக்கெட் எடுக்க லைனில் காத்திருந்து படத்தை நம்பிக்கையோடு பார்ப்பார்கள்.

உண்மையில் அவர்கள் தான் உழைப்பாளி,ரசிகர்களின் உழைப்பின் முன் எங்களது உழைப்பெல்லாம் கிட்ட கூட நெருங்க முடியாது என பெருந்தன்மையுடன் தெரிவித்துள்ளார். மேலும் நம் படத்தை பார்த்தால் சந்தோசம் என்று நினைத்து வரும் ரசிகர்ளுகளுக்கு நாம் அந்த சந்தோசத்தை கொடுத்துவிட்டோம் என்றால், அதுதான் அவர்களுக்கு நாம் செய்யும் மரியாதை என லோகேஷ் கனகராஜ் தெரிவித்தார்.

தற்போதுள்ள புதுமுக இயக்குனர்கள் ஒரு படம் ஹிட்டானதை அடுத்து ரசிகர்களை பல விதத்தில் குறைத்து எடைபோட்டு பேசி வரும் நிலையில், லோகேஷ் கனகராஜ் பெருந்தன்மையோடு ரசிகர்களை மதித்து பேசியுள்ளது கோலிவுட் வட்டாரத்தை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுபோல் பல இயக்குனர்கள் பெருந்தன்மையோடு இருந்தால் கண்டிப்பாக தமிழ் சினிமா மிகப்பெரிய உச்சத்திற்குப் போகும் என்பதில் சந்தேகமே இல்லை என ரசிகர்களும், திரை விமர்சகர்களின் தெரிவித்து வருகின்றனர்.