ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

தனுஷுடன் நடிக்க மாட்டேன் தெறித்து ஓடிய பிரியங்கா.. பட வாய்ப்பை தட்டி தூக்கிய இளம் சிட்டு

தனுஷ் தற்போது நானே வருவேன், திருச்சிற்றம்பலம் ஆகிய படங்களில் பிஸியாக உள்ளார். இப்படங்களை தொடர்ந்து அருண் மாதேஸ்வரன் இயக்கத்தின் கேப்டன் மில்லர் என்ற படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தில் பிரியங்கா அருள்மோகன் தனுஷுக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியானது.

தமிழில் டாக்டர், டான் என தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா அருள்முருகன் நடித்துள்ளார். மேலும் சூர்யாவின் நடிப்பில் வெளியான எதற்கும் துணிந்தவன் படத்திலும் நடித்திருந்தார். இந்நிலையில் தற்போது பிரியங்கா மோகனுக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது.

மேலும் தற்போது இளைஞர்களின் ஃபேவரிட் நாயகியாக பிரியங்கா அருள் மோகன் வலம் வருகிறார். இந்நிலையில் தற்போது அவருக்கு கால்ஷீட் பிரச்சனை காரணமாக கேப்டன் மில்லர் படத்தில் நடிக்க முடியாமல் போயுள்ளது. இதனால் தற்போது தனுஷுக்கு இளம் நடிகை ஒருவர் ஜோடியாக நடிக்கவுள்ளார்.

அதாவது தெலுங்கில் உப்பெண்ணா, ஷாம் சிங்கராய் ஆகிய படங்களில் நடித்த பிரபலமானவர் கீர்த்தி ஷெட்டி. தற்போது இவர் படு பிசியான நடிகையாக வலம் வருகிறார். லிங்குசாமி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகும் தி வாரியர் படத்தில் ராம் பொத்தினேனிக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்துவருகிறார்.

இந்நிலையில் தெலுங்கு ரசிகர்களை தாண்டி தமிழ் ரசிகர்களையும் கீர்த்தி ஷெட்டி வெகுவாக கவர்ந்துள்ளர். கார்த்தி நடிப்பில் வெளியான நான் மகான் அல்ல படத்தில் கீர்த்தி ஷெட்டி குழந்தை நட்சத்திரமாக நடித்து உள்ளார் என்ற செய்தி இணையத்தில் வெளியானது.

தற்போது பாலா இயக்கத்தில் சூர்யாவின் 41 வது படத்தில் கீர்த்தி ஷெட்டி ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். இதைத்தொடர்ந்து தனுஷுக்கு ஜோடியாகவும் கீர்த்தி ஷெட்டி நடிக்க உள்ளார். மேலும் விரைவில் கேப்டன் மில்லர் படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News