விக்ரம் படத்தில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் கதாபாத்திரம்.. கிறுக்கு பிடிக்க வைக்கும் லோகேஷ்

கைதி, மாஸ்டர் படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் விக்ரம் படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. எந்த படங்களுக்கும் இல்லாத அளவுக்கு விக்ரம் படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா மற்றும் பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

கதைக்கு ஏற்றவாறு ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கு ஏற்றாற்போல் நடிகர், நடிகைகளை லோகேஷ் தேர்வு செய்துள்ளார். மேலும் லோகேஷ் கைதி படத்தில் உள்ள சில சம்பவங்கள் மற்றும் கதாபாத்திரங்களை விக்ரம் படத்திலும் பயன்படுத்தியிருந்தார்.

பல முன்னணி நடிகர்கள் இப்படத்தில் நடித்திருந்தாலும் அதை தாண்டி ஏஜென்ட் டீனா கதாபாத்திரம் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் விக்ரம் படத்தில் இன்னொரு முக்கியமான கதாபாத்திரத்தை இயக்குனர் லோகேஷ் மறைத்து வைத்திருக்கிறார்.

அதாவது விக்ரம் படத்தில் விஜய் சேதுபதியிடம் ஒரு கதாபாத்திரம் மொபைல்போனில் பேசுமாறு அமைக்கப்பட்டுள்ளது. அந்த மொபைல் போனில் கி ரோலக்ஸ் என்னும் ஒரு நம்பரில் இருந்து அழைப்பு வருகிறது. அந்தக் கேரக்டர் யார் என ரசிகர்கள் தற்போது அலசி ஆராய்ந்து வருகின்றனர்.

ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் சூர்யா 5 நிமிடங்கள் மட்டுமே வந்த அனைவரையும் மிரள செய்திருந்தார். இந்நிலையில் கி ரோலக்ஸ் சூர்யாவிற்கு வலது கையாக செயல்படக்கூடிய கதாபாத்திரம். அப்பேர்ப்பட்ட ஆக்ரோசமான வில்லனுக்கு எல்லாம் மாயை செயல்படக்கூடிய இந்த கதாபாத்திரம் யார் என்ற குழப்பத்தில் ரசிகர்கள் உள்ளனர்.

ஏற்கனவே கமலஹாசன் லோகேஷ் உடன் மீண்டும் ஒரு படத்தில் நடிக்க திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியானது. அது விக்ரம் படத்தின் மூன்றாவது பாகமாக இருந்தால் கண்டிப்பாக இந்த கி ரோலக்ஸ் கதாபாத்திரம் யார் என்பது ரசிகர்களுக்கு விடை கிடைக்கும்.