புதன்கிழமை, ஜனவரி 15, 2025

ஷேர் கேட்காதீங்க! SJ சூர்யாவை வைத்து சம்பாதித்த சிவகார்த்திகேயன்

சின்னத்திரையில் தொகுப்பாளராகவும் மிமிக்ரி ஆர்டிஸ்ட் ஆகவும் இருந்து, கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து தமிழ் சினிமாவில் தற்போது டாப் நடிகர்களில் ஒருவராக மாறி உள்ளவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அறிமுக இயக்குனர் சிபிசக்கரவர்த்தி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான டான் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று உலக அளவில் 100 கோடி வசூல் சாதனை செய்திருக்கிறது.

மே 13ஆம் தேதி திரையிடப்பட்ட டான் திரைப்படம் ரிலீஸ் ஆன 25 நாட்களில் தமிழகத்தில் மட்டும் 85.07 கோடியும் உலக அளவில் 125.08 கோடியும் வசூல் செய்து பாக்ஸ் ஆபீசை தெரிக்கவிட்டிருக்கிறது. இதனால் தொடர்ந்து டான் படத்தின் குழுவினர் வெற்றி விழா கொண்டாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.

அப்போது சிவகார்த்திகேயன் பகிர்ந்துகொண்ட விஷயம் தற்போது ரசிகர்களின் கவனம் பெற்றிருக்கிறது. அதாவது சிவகார்த்திகேயன் எப்போதுமே ஜாலியாக, கேலி கிண்டலாக பேசுவதை வழக்கமாகக் கொண்டிருப்பதால் இந்தப்படத்தில் தன்னுடன் கூட நடித்த எஸ்கே சூர்யாவை வைத்து காமெடி செய்திருக்கிறார்.

சிவகார்த்திகேயன் சினிமாவில் நுழைவதற்கு முன் மிமிக்ரி ஆர்டிஸ்ட் ஆக இருந்தபோது பெரும்பாலும் அவர் எஸ்ஜே சூர்யா போலவே பேசி தான் ரசிகர்களின் கைதட்டல் வாங்கியுள்ளார். அதன்பிறகு எஸ்கே சூர்யா என்றால் சிவகார்த்திகேயன் என்கின்ற அளவிற்கு எஸ்ஜே சூர்யா-வின் குரல் சிவகார்த்திகேயன் என்ற அளவிற்கு ஆரம்ப காலகட்டத்தில் உதவியிருக்கிறது.

அதற்காக ‘இப்ப வந்து அதில் ஷேர் கேட்டு விடாதீர்கள்’ அதற்கெல்லாம் வெறும் 2000, 2500 தன் சம்பளமாக வாங்கினேன் என்று எஸ்கே சூர்யாவை கலாய்த்திருக்கிறார். உழைத்தால் நிச்சயம் எந்தத் துறையிலும் முன்னேறலாம் என்பதற்கு எடுத்துக்காட்டாக சிவகார்த்திகேயன் திகழ்கிறார் என அவருடைய ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் இந்த விஷயத்தை வைத்து எடுத்துக்காட்டுகின்றனர்.

மேலும் ஆயிரக்கணக்கில் மட்டுமே சம்பளம் வாங்கி மிமிக்ரி ஆர்டிஸ்ட் ஆக இருந்த சிவகார்த்திகேயனின் டான் படத்தில் 25 கோடியை சம்பளமாக பெற்ற அவரது வளர்ச்சி அவரைப்போல் சினிமாவில் நுழைய ஆசைப்படும் திறமைசாலிகளுக்கு உந்துகோலாக இருக்கிறது.

Trending News