லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியாகியுள்ள விக்ரம் திரைப்படம் திரையரங்குகளில் பலத்த வரவேற்புடன் ஓடிக் கொண்டிருக்கிறது. இதுவரை வெளியான தமிழ் திரைப்படங்களில் விக்ரம் திரைப்படம் பாக்ஸ் ஆபீசை ஒரு கலக்கு கலக்கி வருகிறது.
விக்ரம் திரைப்படத்தை தயாரித்து நடித்துள்ள கமல் இதன் மூலம் பல மடங்கு லாபத்தை பார்த்து வருகிறார். படம் வெளியான ஒரு வாரத்திலேயே 250 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது. இது இந்த வார இறுதி நாட்களில் நான் இன்னும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் விக்ரம் படத்தின் அடுத்த பாகத்தை பற்றிய ஒரு சஸ்பென்ஸ் வெளிவந்துள்ளது. விக்ரம் படத்தில் கமல்ஹாசன் தனது பேரனை தேடுவதுபோல் காட்டப்பட்டிருந்தது. இது குறித்த காட்சிகள் அடுத்த பாகத்தில் இன்னும் தெளிவாக காட்டப்பட இருக்கிறது.
அதில் அந்த குழந்தை நட்சத்திரம் வளர்ந்து பெரியவனாக இருக்குமாறு காட்டப்பட இருக்கிறது. அந்த கதாபாத்திரத்தில் பிரபல தெலுங்கு நடிகர் ராம்சரண் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் இயக்குனர் லோகேஷ், நடிகர் ராம் சரணை சந்தித்து இது குறித்து பேசியிருக்கிறார்.
கதையை கேட்ட ராம்சரண் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் விக்ரம் திரைப்படத்தின் அடுத்த பாகத்தில் ராம் சரணும் இணைய இருக்கிறார்.
ஏற்கனவே சில நாட்களுக்கு முன்பு கமல் விக்ரம் படத்தின் அடுத்த பாகத்தை பற்றி வெளிப்படையாக தெரிவித்திருந்தார். அதில் சூர்யாவின் ரோலக்ஸ் கதாபாத்திரம் கமலுடன் நேரடியாக மோத இருப்பதை பற்றியும் கமல் நாசுக்காக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இந்த கூட்டணியில் ராம் சரணும் இணைய இருப்பது ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டியுள்ளது. இப்படி மெகா கூட்டணியுடன் உருவாகும் அடுத்த பாகமும் இந்த விக்ரம் திரைப்படத்தைப் போலவே பாக்ஸ் ஆபிஸை கலக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.