உலகளாவிய படத்தில் ரோலக்ஸ்.. அறிவியல் இயக்குனருடன் சூர்யாவின் அடுத்த படம்!

கமர்ஷியல் படங்களை தவிர்த்து நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் சூர்யாவின் சூரரைப்போற்று, ஜெய்பீம், எதற்கும் துணிந்தவன் போன்ற படங்கள் வரிசையாக ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. நடிக்கின்ற படங்கள் மட்டுமல்லாமல் தன்னுடைய தயாரிப்பிலும் பசங்க 2, 24, மகளிர் மட்டும், சூரரைப்போற்று போன்ற சமுதாயத்திற்கு தேவையான நல்ல கருத்துக்களை வெளிக்காட்டும் படத்தைத் தயாரித்துக் கொண்டிருக்கிறார்.

இதைத் தொடர்ந்து சமீபத்தில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் மூன்று நிமிடம் மட்டுமே திரையில் தோன்றினாலும், ரோலக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் சூர்யா திரையரங்கையே மிரள விட்டிருப்பார். விக்ரம் படத்திற்கு பிறகு சூர்யா வேற லெவலில் ட்ரெண்டாக்கி கொண்டிருக்கிறார். சூர்யாவின் அடுத்த படம் என்ன என்பதை அறிந்துகொள்ள அவருடைய ரசிகர்களும் சோஷியல் மீடியாவில் வலைவீசித் தேடுகின்றனர்.

அவர்களுக்கெல்லாம் தீனி போடும் விதமாக தற்போது சூர்யாவின் அடுத்த படத்தை ஆர் ரவிக்குமார் இயக்கவுள்ளார். கடந்த 2015 ஆம் ஆண்டு அறிமுக இயக்குனராக அறிவியல் சம்பந்தப்பட்ட கதையம்சம் கொண்ட ‘இன்று நேற்று நாளை’ திரைப்படம் ரசிகர்களிடையே வசூல் ரீதியாகவும் விமர்சன வாயிலாகவும் ஏகபோக வரவேற்பை பெற்றது.

இதில் விஷ்ணு விஷால், மியா ஜார்ஜ், கருணாகரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார்கள். இந்த படம் ஹாலிவுட் படங்களைப்போன்று கற்பனை மிகுந்த படமாக இருந்ததால் தமிழ் சினிமாவிற்கு இது போன்ற படங்கள் அவசியம். அதைத் தெளிவாக உணர்ந்திருக்கும் ஆர் ரவிக்குமார் அடுத்தபடியாக சிவகார்த்திகேயன், ரகுல் பிரீத் சிங் இணைந்து நடித்திருக்கும் ‘அயலான்’ என்ற படத்தை அவரே எழுதி இயக்கி முடித்துள்ளார்.

இந்த படத்திலும் எலியை மையமாக வைத்து அறிவியல் சம்பந்தப்பட்ட படமாகவே எடுத்திருக்கிறார். இந்தப்படத்தின் போஸ்ட் ப்ரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது கூடிய விரைவில் இந்த படம் ரிலீஸ் ஆகிறது. எனவே ஆர் ரவிக்குமார் அடுத்தபடியாக எழுதி இயக்க இருக்கும் படம் பான் இந்தியா படமாக மட்டுமல்லாமல், இன்டர்நேஷனல் கதைக்களத்தை கொண்ட படமாக உருவாக உள்ளது.

இந்த உலகளாவிய படத்தில் அறிவியல் இயக்குனருடன் சூர்யா இந்தப் படத்தில் கதாநாயகனாக இணைகிறார். இது குறித்த முழு அறிவிப்பும் கூடிய விரைவில் வெளியாகவுள்ளது. இந்தப் படம் மட்டும் வெளியானால் வசூல் ரீதியாக மட்டுமல்லாமல் சூர்யா நடிப்பில் இதுவரை வெளியான சூப்பர் ஹிட் படங்களின் லிஸ்டில் முக்கியமான படமாக இடம் பெறும்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →