புதன்கிழமை, நவம்பர் 27, 2024

வெந்து தணிந்தது காடு படத்தை கைப்பற்றிய அமேசான் நிறுவனம்.. இத்தனை கோடியா?

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு படம் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றது. இப்படத்தில் எஸ் ஜே சூர்யா வில்லனாக மிரட்டியிருந்தார். இப்படத்தை தொடர்ந்து சிம்பு மற்றும் எஸ் ஜே சூர்யாவின் மார்க்கெட் தற்போது உயர்ந்துள்ளது.

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்துள்ளார். இவர்கள் காம்போவில் வெளியான அனைத்து படங்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. விண்ணைதாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா போன்ற படங்களில் சிம்பு பணியாற்றியுள்ளார்.

இந்நிலையில் மூன்றாவது முறையாக இணையும் வெந்து தணிந்தது காடு படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தைப் பெற்றுள்ளது.

வெந்து தணிந்தது காடு படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரித்துள்ளார். இந்நிலையில் படம் வெளியான பிறகு டிஜிட்டல் உரிமையை அமேசான் பிரைம் வீடியோ கைப்பற்றியுள்ளது. கிட்டத்தட்ட 15 கோடி ரூபாய்க்கு இந்நிறுவனம் வெந்து தணிந்தது காடு படத்தை பெற்றுள்ளது.

மேலும் இப்படத்தின் சாட்டிலைட் உரிமைக்காக தற்போது கடும் போட்டி நிலவி வருகிறது. மாநாடு படம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதால் வெந்து தணிந்தது காடு படம் மிகப்பெரிய வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் இவ்வாறு போட்டி போட்டுக் கொண்டு படத்தை வாங்க முன்வருகின்றனர்.

மேலும் மாநாடு படத்திற்கு பிறகு சிம்பு படங்களுக்கு பிசினஸ் எகிற தொடங்கியதால் தற்போது சிம்பு ஒரு படத்திற்கு 25 கோடியாக சம்பளத்தை உயர்த்தி உள்ளாராம். மேலும் முழு வீச்சாக சிம்பு படங்களில் கவனம் செலுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

- Advertisement -spot_img

Trending News