உலகநாயகனே பார்த்து திருந்துங்கள் விஜய், அஜித்.. எல்லாம் சில காலம் தான்!

படத்தை எப்படி ப்ரோமோட் பண்ணுவது என கமலஹாசனை பார்த்து முன்னணி நடிகர்கள் கற்றுக்கொள்ள வேண்டுமென பலரும் அறிவுறுத்தி உள்ளது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பேன் இந்தியா திரைப்படமாக உலக அளவில் பல திரையரங்குகளில் வெளியானது. இதனிடையே இத்திரைப்படத்தின் புரமோஷனுக்காக, ஆந்திரா, கர்நாடகா, மலேசியா உள்ளிட்ட பல இடங்களுக்கு விக்ரம் படக்குழுவினருடன் சென்று கமலஹாசன் ரசிகர்களிடம் விக்ரம் படத்தை பற்றி பேசி வெற்றிக்கு வித்திட்டார்.

இதனிடையே சமீபத்தில் நடிகர் அஜித்தின் நடிப்பில் வெளியான வலிமை மற்றும் நடிகர் விஜயின் நடிப்பில் வெளியான பீஸ்ட் உள்ளிட்ட திரைப்படங்கள் தமிழ் மொழியைத் தாண்டி பல மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. ஆனால் இத்திரைப்படங்களுக்காக அஜித் மற்றும் விஜய் பெரிய அளவில் ப்ரோமோட் செய்யாமல் இருந்தனர்.

100 கோடிக்கு மேல் பொருட்செலவில் எடுக்கப்படும் இவர்களின் திரைப்படங்களுக்கு சுமார் 500 கோடி வரை வசூல் சாதனை படைக்கும். ஆனால் படங்களில் நடிப்பதோடு மட்டும் நிறுத்தி விட்டு ப்ரோமோஷனுக்காக தலையை கூட காட்டாமல் சென்று விடுவார். இந்நிலையில் 67 வயதாகியும் கமலஹாசன் தான் நடித்த திரைப்படத்தின் ப்ரோமோஷனுக்காக 15 நாட்களுக்கும் மேலாக ரசிகர்களை சந்தித்து வந்தார்.

இந்நிலையில் கமலஹாசனை பார்த்தாவது எப்படி தாங்கள் நடிக்கும் படத்திற்கு ப்ரோமோஷன் செய்ய வேண்டும் என்பதை பார்த்து முன்னணி நடிகர்கள் திருந்த வேண்டும் என பலரும் அறிவுறுத்தி வருகின்றனர். தற்போது விக்ரம் திரைப்படம் 300 கோடிக்கு மேல் தமிழகத்தில் மட்டும் வசூல் சாதனை படைத்துள்ள நிலையில், கேரளா ,ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் 30 கோடிக்குமேல் வசூல் சாதனை படைத்துள்ளது.

சமீபத்தில் பேன் இந்தியா மொழிப்படமாக உருவாகி வெற்றிபெற்ற ஆர்ஆர்ஆர், பாகுபலி, கேஜிஎப் உள்ளிட்ட படங்களை அந்த படத்தில் நடித்த நடிகர்களே பல மாநிலங்களுக்கு சென்று பேட்டி கொடுப்பது, ரசிகர்களை சந்திப்பது, என தாங்கள் நடித்த திரைப்படத்தை ஆர்வத்துடன் பிரமோட் செய்தனர். தற்போது தமிழ் சினிமாவில் உலக நாயகன் கமலஹாசன், ஒரு படத்தை ப்ரோமோட் எப்படி செய்ய வேண்டும் என்பதை முன்னணி நடிகர்களுக்கு காண்பித்து விதையாக அமைந்துள்ளார்.