சனிக்கிழமை, டிசம்பர் 28, 2024

பெரிய தயாரிப்பாளருக்கு கொக்கி போட்ட அண்ணாச்சி.. தி லெஜன்ட் படத்தின் தற்போதைய நிலைமை

சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் அண்ணாச்சி தனது கடையின் விளம்பரத்தில் தானே நடித்து பிரபலமானார். இந்நிலையில் தற்போது தி லெஜன்ட் என்ற படத்தில் நடித்துள்ளார். முதல்முறையாக இப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் கால்பதித்துள்ளார்.

இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என ஒரு பான் இந்திய திரைப்படமாக வெளியாகயுள்ளது. தி லெஜன்ட் படத்தை உல்லாசம் மற்றும் விசில் போன்ற படங்களை இயக்கிய ஜேடி, செர்ரி இப்படத்தை இயக்கியுள்ளனர்.

இப்படத்தில் பிரபு, விவேக், நாசர், மயில்சாமி போன்றோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் ஆடியோ லான்ச் பங்க்ஷன் நேரு உள்விளையாட்டு அரங்கில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது.

இதில் பல கோடிகள் செலவு செய்து கோலிவுட், பாலிவுட் நடிகைகளை அண்ணாச்சி வரவழைத்திருந்தார். இதற்காகவே பல கோடிகள் அண்ணாச்சி செலவு செய்திருந்தாராம். மேலும் இப்படம் ஆக்ஷன், ரொமான்ஸ், காமெடி என அனைத்தும் கலந்த படமாக இருக்கும் என கூறப்படுகிறது.

அதேபோல் படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. தற்போது டாப் ஹீரோக்களாக இருக்கும் ரஜினி, விஜய் பட ட்ரெய்லரை விட அண்ணாச்சி படத்தின் ட்ரெய்லர் யூட்யூபில் பல கோடி பார்வையாளர்களை தாண்டி சென்றது.

இப்படத்தின் ரிலீஸ் எப்போது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்நிலையில் தி லெஜண்ட் படத்தை முன்னணி தயாரிப்பாளர் மற்றும் பைனான்சியர் அன்புச்செழியன் வெளியிட அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Trending News