இந்தியன் 2 திரைப்படத்தை தயாரிக்க உள்ள லைகா தயாரிப்பு நிறுவனத்திற்கு, உதயநிதி ஸ்டாலின் பணம் கொடுத்து உதவ உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 1996 ஆம் ஆண்டு வெளி வந்த இந்தியன் திரைப்படம் பிரமாண்டமான வெற்றியை கொடுத்தது.
இதைத்தொடர்ந்து, இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தின் படபிடிப்பு 2018 ஆம் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் பல பிரச்சினைகள் காரணமாக இந்தியன் 2 படப்பிடிப்பு தள்ளிப்போனது. இதனிடையே தற்போது உலக நாயகன் கமலஹாசனின் விக்ரம் திரைப்படம், மாபெரும் வெற்றி அடைந்ததை அடுத்து இந்தியன் 2 திரைப்படத்தில் கமல் கூடிய விரைவில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது.
இதற்காக இயக்குனர் ஷங்கர் மற்றும் லைக்கா புரோடக்ஷன்ஸ் மும்முரமாக இந்தியன் 2 படத்தை தொடங்க ஆயத்தமாகி வருகின்றனர். இந்நிலையில் லைகா புரோடக்சன்ஸ் நிறுவனர் சுபாஸ்கரனிடம் நடிகர் மற்றும் எம் எல் ஏ உதயநிதி ஸ்டாலின் தனிப்பட்ட முறையில், இந்தியன் 2 திரைப்படத்திற்கு எந்த ஒரு தேவையாக இருந்தாலும் உதவி செய்ய உள்ளதாக தானே முன்வந்து கூறியுள்ளார்.
மேலும் இந்தியன் 2 படத்தின் திரையரங்கு உரிமையை தனது ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் மூலமாக வாங்கி கொள்ளவதாகவும், சாட்டிலைட் உரிமையை கலைஞர் தொலைக்காட்சிக்கு பணம் கொடுத்து வாங்கியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் இந்தியன் 2 திரைப்படத்திற்கு பண தேவை ஏற்பட்டால் தான் கொடுக்க தயாராக இருப்பதாகவும் உதயநிதி தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் சிவகார்த்திகேயனின் நடிப்பில் வெளியான டான் திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்த நிலையில்,திரையரங்கு உரிமையை உதயநிதி ஸ்டாலின் பெற்றிருந்தார். இந்நிலையில் கமலின் இந்தியன் 2 திரைப்படதையும் உதயநிதி வாங்க பல சலுகைகள் தானே முன்வந்து தெரிவித்துள்ளார்.
கமலஹாசனுக்கும் , உதயநிதி ஸ்டாலினுக்கும் அரசியல் ரீதியான பல கருத்து வேறுப்பாடுகள் இருந்தாலும் திரைப்படம், தொழில் என்று வந்தவுடன் உதயநிதி ஸ்டாலின் இந்தியன் 2 படத்துக்காக அக்கறை காட்டுவது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இருந்தாலும் இதிலும் அரசியல் உள்நோக்கம் இருக்கலாம் எனவும் கோலிவுட் வட்டாரத்தில் பரவலாக பேசப்படுகிறது.