லோகேஷ்க்கு கார், சூர்யாவிற்கு ரோலக்ஸ், அப்போ அனிருத்திற்கு.? கமலை போட்டுக்கொடுத்த நியூஸ் ரீடர்

இந்திய அளவில் 300 கோடிக்கு மேல் வசூலை வாரிக் குவித்துக் கொண்டிருக்கும் விக்ரம் திரைப்படம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை விட அதிகமாகவே வரவேற்பு கிடைக்கிறது ஜூன் மூன்றாம் தேதி திரைக்கு வந்த விக்ரம் திரைப்படம் இன்று வரை எந்த நெகட்டிவ் கமெண்ட் களையும் பெறாமல் ரசிகர்களை நாளுக்கு நாள் திரையரங்கை நோக்கி படை எடுக்க வைக்கிறது.

இதில் நான்கு வருடங்களுக்குப் பிறகு திரையில் தோன்றிய கமலுடன் விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார்கள். அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்தார். கமலஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் 120 கோடி பொருட்செலவில் எடுக்கப்பட்ட விக்ரம் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி பல கோடி லாபத்தை பெற்ற வெற்றிப்படமாக மாற்றியமைக்காக லோகேஷ்க்கு இரண்டரை கோடி மதிப்புள்ள LEXUS காரை கமலஹாசன் அன்பளிப்பாக அளித்தார்.

இவருக்கு மட்டும் அல்லாமல் விக்ரம் படத்தில் பணிபுரிந்த 13 உதவி இயக்குனர்களுக்கு அப்பாச்சி பைக் பரிசாக வழங்கப்பட்டது. மேலும் இந்த படத்தில் மூன்று நிமிடத்திற்கு மட்டுமே வந்தாலும் தன்னுடைய அட்டகாசமான நடிப்பை வெளிக்காட்டிய நடிகர் சூர்யாவுக்கு ரோலக்ஸ் வாட்ச் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார்.

இவ்வாறு கோடிக்கணக்கில் விக்ரம் படத்தின் மூலம் பணம் பார்த்த கமல், அதை தான் மட்டுமே வைத்துக் கொள்ளாமல் இந்தப் படத்திற்காக உழைத்தவர்களுக்காக பரிசு மழை பொழிந்து கொண்டிருக்கிறார். இதனால் லோகேஷ் கனகராஜ் மற்றும் அனிருத் இருவரும் கலந்துகொண்ட விக்ரம் படத்தின் வெற்றி விழா கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர்.

அப்போது அனிருத்திடம் செய்தியாளர் ஒருவர், ‘லோகேஷ்க்கு கார், சூர்யாவிற்கு ரோலக்ஸ் வாட்ச் உங்களுக்கு என்ன அனிருத்?’  என்று கேள்வி கேட்க உடனே அனிருத் சிரித்துக்கொண்டே, ‘விக்ரம் படமே கமல் எனக்கு கொடுத்த பரிசு’ என்று மறைத்து பேசியிருக்கிறார். இப்படி கமலை வெளிப்படையாக செய்தியாளர் கமல் எப்படிப்பட்டவர் என்பதை அனிருத்திடம் வெளிப்படையாக போட்டுக் கொடுத்துவிட்டார்.

அந்த சமயத்தில் அனிருத்தின் பேச்சை பார்த்தாலே கமலிடம் இருந்து ஏதாவது பெருசாக எதிர்பார்த்ததது கிடைக்காமல் போனது போல் தெரிகிறது. ஆனால் அதையெல்லாம் வெளிக்காட்டாமல் செய்தியாளர் கேள்வி கேட்டவுடனேயே சிரித்துக்கொண்டு கமலை விட்டு கொடுக்காமல் பேசியிருக்கிறார்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →