வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

ரஜினி படத்திற்கு போட்ட முக்கியமான கண்டிஷன்.. படக்குழுவிற்கு ஆட்டம் காட்டிய சூப்பர் ஸ்டார்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளிவந்த அண்ணாத்த திரைப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றாலும், ரசிகர்களிடமிருந்து கலவையான விமர்சனங்களை சந்தித்தது. இதனால் அடுத்த படத்தில் நிச்சயம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய 169-வது படத்தை பார்த்து பார்த்து ஒவ்வொரு முடிவையும் எடுத்துக்கொண்டிருக்கிறார்.

ஆகையால் தலைவர் 169 படத்தை இயக்கும் பொறுப்பை நெல்சன் திலீப் குமாரிடமும், திரைக்கதை எழுதும் பொறுப்பை கேஎஸ் ரவிக்குமாரிடமும் கொடுத்திருக்கிறார். இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு ரஜினி நடித்த படம் வருகிற ஆகஸ்ட் மாதம் ஹைதராபாத் ராமோஜிராவ் ஸ்டேடியத்தில் தொடங்கவிருக்கிறது.

இதற்காக பிரமாண்ட செட் எல்லாம் போட்டு விட்டனர். இந்நிலையில் இந்த படத்தை எவ்வளவு சீக்கிரமாக முடிக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரமாக முடிக்க வேண்டும் என்று ரஜினிக்கு உத்தரவு போட்டிருக்கிறார். இந்த படத்தில் பல பெரிய ஆர்ட்டிஸ்டுகள் நடிக்கின்றனர். பாகுபாடின்றி எல்லோருக்கும் ஒரே அக்ரிமென்ட்.

ஆனால் இந்த படத்தில் நடிக்க கூடிய சிறிய ஆர்டிஸ்ட் முதல் பெரிய ஆர்டிஸ்ட் வரை மூன்று மாதங்கள் எப்போது கூப்பிட்டாலும் படப்பிடிப்புக்கு வந்து விட வேண்டுமாம். நான் அந்த படத்தில் நடிக்கிறேன். இந்த படத்தில் நடிக்கிறேன் என்று யாரும் தடை போடக் கூடாதாம்.  அப்பேர்ப்பட்ட ஒரு ஸ்ட்ரீட் அக்ரிமெண்ட் போட்டு படத்தை சீக்கிரமாக முடிக்க படக்குழு திட்டமிட்டு இருக்கின்றனர்.

இது எல்லாம் ரஜினி சொல்லியே நடக்கிறதாம். ரஜினி நாம் படத்தை முடிக்க வேண்டுமானால் இப்படி செய்தாக வேண்டும் என்று அனைவரிடமும் பேசி விட்டாராம். ரஜினியுடன் இந்தப் படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், சிவகார்த்திகேயன், ரம்யாகிருஷ்ணன், ஐஸ்வர்யா ராய், பிரியங்கா அருள் மோகன், யோகிபாபு உள்ளிட்டோர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் சன் பிக்சர்ஸ் தயாரித்து அனிருத் இசையமைக்கும் தலைவர் 169 படம், முழுக்க முழுக்க சிறை மற்றும் சிறைக்கைதிகள் சம்பந்தப்பட்ட கதைக்களத்தை உடையதாகவும் ஜெயிலர் என்ற டைட்டில் படத்திற்கு வைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Trending News