வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

ரஜினிக்கு எதிராக வெடிக்கும் போராட்டம்.. ஜெயிலரால் நெல்சனுக்கு வந்த புது ஆப்பு.!

ரஜினிகாந்த் செய்யும் செயலுக்கு கண்டிப்பாக போராட்டம் நடத்தப்போவதாக இயக்குனர் ஆர் கே செல்வமணி ஆவேசத்துடன் பேசியது தற்போது வைரலாகியுள்ளது. தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனராக வலம் வந்த ஆர்கே செல்வமணி, தற்போது தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் செயலாளராக இருந்து வருகிறார்.

இந்நிலையில் முன்னணி நடிகர்கள் நடிக்கும் திரைப்படங்களின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெறாமல் ஹைதராபாத் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் நடைபெறுவது சர்ச்சையாக பேசப்பட்டு வருகிறது. ஏனென்றால், சென்னை அல்லது தமிழகத்தில் உள்ள மற்ற மாநிலங்களில் படப்பிடிப்பு நடைபெற்றால் மட்டுமே இங்குள்ள திரைப்பட தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகரிக்கும்.

ஆனால் வெளிமாநிலங்களில் படப்பிடிப்பு நடந்தால் இங்குள்ளவர்களின் வேலை வாய்ப்பு பாதிக்கும் என்பதால் பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள ஜெயிலர் திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக தயாரிப்பு நிறுவனம் ஹைதராபாத்தில் செட் அமைத்துள்ளனர்.

இந்நிலையில் இதுகுறித்து பேசிய ஆர்.கே செல்வமணி, ரஜினிக்கு எதிராக தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் சார்பாக போராட்டம் நடைபெறும் என தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் கூட தளபதி விஜயின் தளபதி66 திரைப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்ற நிலையில் ,இந்த பிரச்சனை வந்ததையடுத்து சென்னைக்கு இரண்டாம் கட்ட படப்பிடிப்பை மாற்றி அமைத்தார்.

அதேபோல, தல அஜித்தின் 61 திரைப்படமும் ஹைதராபாத்தில் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் அங்கு வேலை செய்து வருவதால் இது பெரிய அளவில் பேசப்படவில்லை. ஆனால் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் 200 கோடிக்கு மேல் பட்ஜெட்டில் உருவாகும் திரைப்படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத்தில் நடைப்பெறுவது இங்குள்ள பல தொழிலாளர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

ஏற்கனவே பீஸ்ட் படத்தின் தோல்வியால் நெல்சன் மனமுடைந்து எப்படியாவது ஜெயிலர் திரைப்படத்தை இயக்கி வெற்றி கொடுக்க வேண்டும் என்பதில் மும்முரமாக இருந்து வருகிறார். இதனிடையே, இருக்கும் பிரச்சனை பத்தாது என மேலும் ஒரு பிரச்சனை வருவதால் நெல்சன் எப்படி சமாளிக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Trending News