திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

விக்ரம் படத்தை போல் கொண்டாடப்பட்ட ரஜினியின் படம்.. இப்ப பார்த்தாலும் பரவசம் அடையும் 90ஸ் கிட்ஸ்

இப்போது திரையுலகில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் ஒரே விஷயம் விக்ரம் திரைப்படத்தை பற்றி தான். அந்த அளவுக்கு வசூலில் மிரட்டிக் கொண்டிருக்கும் இந்த படம் கமலுக்கு மட்டும் அல்லாமல் படக்குழுவினர் அனைவருக்கும் மிகுந்த சந்தோஷத்தை கொடுத்துள்ளது.

படம் வெளியாகி பல நாட்கள் கடந்த பின்னும் இன்றுவரை திரையரங்குகளில் வெற்றிகரமாக இந்த படம் ஓடிக்கொண்டிருக்கிறது. இதுவரை எந்த தமிழ் சினிமாவுக்கும் கிடைக்காத இப்படி ஒரு வரவேற்பை பார்த்து பலரும் ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.

தற்போது கமல் இப்படி ஒரு வெற்றிக்கு உறுதுணையாக இருந்த படக்குழுவினருக்கு ஏராளமான பரிசுகளை கொடுத்து அசத்தி இருக்கிறார். அந்த வகையில் படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு கார், சிறப்பு தோற்றத்தில் அசத்திய சூர்யாவுக்கு காஸ்ட்லி வாட்ச் மற்றும் உதவி இயக்குனர்களுக்கு பைக் என்று கமல் தன் மகிழ்ச்சியை அனைவருடனும் வருகிறார்.

இதேபோன்ற ஒரு நிகழ்வு தமிழ் திரையுலகில் சில வருடங்களுக்கு முன்பு நடந்து இருக்கிறது. அதாவது ரஜினியின் நடிப்பில் 1995ம் ஆண்டு வெளிவந்த பாட்ஷா படத்தை ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர். சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினி டான் கதாபாத்திரத்தில் நடித்த அந்த திரைப்படம் நல்ல வசூல் பெற்று லாபம் பார்த்தது.

சொல்லப்போனால் இன்று வரை 90ஸ் கிட்ஸ்கள் மிகவும் பரவசமடைந்து பார்க்கும் ஒரு திரைப்படமாகவும் அந்த படம் இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் மார்க் ஆண்டனி என்ற கதாபாத்திரத்தில் நடித்த ரகுவரனின் நடிப்பு பலரின் பாராட்டுகளையும் பெற்றது.

மேலும் அந்தப் படத்தின் வெற்றியை ரஜினி பட குழுவினர் அனைவருக்கும் பல பரிசுகளை கொடுத்து சிறப்பாக கொண்டாடினார். கமல் அளவுக்கு அவர் பெரிய பரிசுகள் கொடுத்து கொண்டாடாவிட்டாலும், அனைவருக்கும் மனம் நிறைந்த பரிசுகளை கொடுத்து ஆச்சரியப்படுத்தினார். அதன் பிறகு ரஜினியின் நடிப்பில் பல வெற்றித் திரைப்படங்கள் வந்திருந்தாலும் இந்த படம் பலருக்கும் மறக்க முடியாத ஒரு படமாக இருக்கிறது.

Trending News