தமிழ், தெலுங்கு மொழி படங்களில் படு பிசியாக நடித்து வந்தவர் நடிகை காஜல் அகர்வால். தமிழ் சினிமாவில் விஜய், அஜித், சூர்யா, தனுஷ், கார்த்தி என முன்னணி நடிகர்களின் படங்களில் காஜல் அகர்வால் நடித்துள்ளார். இவர் கடந்த 2020ஆம் ஆண்டு கவுதம் கிச்லு என்பவரை திருமணம் செய்து செய்துகொண்டார்.
இந்நிலையில் லைகா தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் கமலஹாசன் நடிப்பில் உருவாகி வந்த இந்தியன் 2 படத்தில் காஜல் அகர்வால் நடித்து வந்தார். அந்த சமயத்தில் காஜல் அகர்வால் கர்ப்பமானதால் இப்படத்திலிருந்து விலகிவிட்டார். மேலும் எந்த படத்திலும் ஒப்பந்தம் ஆகாமல் இருந்தார்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு காஜல் அகர்வாலுக்கு நீல் கிச்லு என்ற ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. தற்போது அந்த குழந்தையை வளர்ப்பதில் காஜல் முழு கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு காஜல் மகனின் புகைப்படத்தை சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.
இந்நிலையில் இன்று முதல் தந்தையர் தினத்தை காஜலின் கணவர் கௌதம் கொண்டாடுகிறார். மேலும் இன்று இன்னொரு விசேஷமாக காஜலின் பிறந்த நாளாகவும் உள்ளது . ஒரே நாளில் இந்த இரண்டு மகிழ்ச்சியான விழாக்களை காஜலின் குடும்பத்தினர் கொண்டாடுகின்றனர்.
தற்போது காஜல் ஒரு முக்கிய முடிவு எடுத்துள்ளார். அதாவது தான் கர்ப்பமாக இருக்கும் போது நடித்த படங்களிலிருந்து காஜல் விலகிவிட்டார். இந்நிலையில் தற்போதும் அவருக்கு பட வாய்ப்புகள் வந்த வண்ணமே உள்ளது. ஆனால் காஜல் அகர்வால் தற்போது தன் மகனை பார்த்துக் கொள்வதில் கவனம் செலுத்துவதாக கூறியுள்ளாராம்.
மேலும் ஒரு வருடத்திற்கு எந்த படத்திலும் நடிக்க மாட்டேன் என தன்னை நாடி வரும் இயக்குனர்களிடம் திட்டவட்டமாக கூறிவிட்டாராம். கல்யாணமான நடிகைகளுக்கு தற்போது வாய்ப்பு கிடைப்பதில்லை. ஆனால் குழந்தை பெற்றுக் கொண்ட பிறகும் வரும் வாய்ப்பை தனது மகனுக்காக காஜல் மறுத்துள்ளார்.