வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

அவசர அவசரமாக வெளியான ஜெயிலர் பட டைட்டில்.. ரஜினியால் மாட்டிக்கொண்டு முழிக்கும் நெல்சன்

பீஸ்ட் திரைப்படத்தை அடுத்து இயக்குனர் நெல்சன் சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து ஜெயிலர் திரைப்படத்தை இயக்கயிருக்கிறார். சன் பிக்சர்ஸ் பிரமாண்டமாக தயாரிக்கும் இந்த திரைப்படம் இன்னும் சில நாட்களில் பூஜை போடப்பட்டு ஆரம்பிக்கப்பட இருக்கிறது.

சமீபகாலமாக பெரிய நடிகர்களின் பட டைட்டில் படப்பிடிப்பு முடியும் தருவாயில் தான் அறிவிக்கப்படுகிறது. ஆனால் சூப்பர் ஸ்டாரின் இந்த படத்தின் டைட்டில் படத்தின் பூஜை போடப்படுவதற்கு முன்பே வெளியானது பலருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது.

சொல்லப்போனால் இந்த டிவிஸ்ட்டை யாரும் நிச்சயம் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். இப்படி திடீரென்று வெளியான இந்த டைட்டில் போஸ்டருக்கு பின்னால் ஏகப்பட்ட காரணங்கள் இருக்கிறதாம். அதாவது தற்போது கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்துள்ள விக்ரம் திரைப்படம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது.

தமிழ் சினிமாவில் பல வருடங்களுக்கு பிறகு இப்படி ஒரு பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் கிடைத்துள்ளது. இது ரஜினி உள்பட முன்னணி நடிகர்கள் பலரையும் சற்று அதிர்வடைய செய்துள்ளது. இதனால் பெரிய நடிகர்கள் பலரும் தங்கள் படங்களின் மூலம் அதிக லாபம் பார்த்துவிட வேண்டும் என்று கடுமையாக உழைத்துக் கொண்டு இருக்கின்றனர்.

அதே போன்ற ஒரு முடிவில் தான் தற்போது ரஜினியும் இருக்கிறாராம். விக்ரம் படம் அளவிற்கு ஜெயிலர் படத்தையும் கொண்டுவர வேண்டும் என்பதுதான் அவருடைய ஆசையாக இருக்கிறது. இதனால்தான் அவர் தற்போது சோசியல் மீடியாவை பரபரப்பாக்கும் பொருட்டு டைட்டிலை அவசர அவசரமாக வெளியிட வைத்தாராம்.

இதனால் தற்போது நெல்சன் தான் மாட்டிக்கொண்டு முழித்து வருகிறார். எனென்றால் படத்தின் டைட்டில் வெளியான கொஞ்ச நேரத்திலேயே படத்தின் கதை இதுதான் என்ற ஒரு தகவல் சோசியல் மீடியாவை கலக்கிக் கொண்டிருக்கிறது. மேலும் டைட்டில் போஸ்டரை வைத்து ஆளாளுக்கு ஒரு கதையை கட்டி வருகிறார்கள்.

இந்நிலையில் படம் வெளியான பிறகு இதில் ஏதாவது ஒன்றை வைத்து படம் காப்பி என்று சொல்லிவிடுவார்களோ என்ற பயம் நெல்சனுக்கு அதிகமாக இருக்கிறதாம். மேலும் விஜய் ரசிகர்களின் கோபத்தை சம்பாதித்து வைத்துள்ள நெல்சன் ரஜினி ரசிகர்களைத் திருப்திப்படுத்த வேண்டுமென்று மும்முரமாக கதையை தயார் செய்து வைத்திருக்கிறார்.

ஆனால் ரஜினியும் விக்ரம் திரைப்படத்தை பார்த்துவிட்டு ஜெயிலர் படக்கதையில் ஏகப்பட்ட விஷயங்களை மாற்ற சொல்கிறாராம். இப்படி அவரின் தலையீடு அதிகமாக இருப்பதால் என்ன செய்வது என்று தெரியாமல் தற்போது நெல்சன் தவித்து வருவதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

Trending News