ஆரம்பத்தில் பல சர்ச்சைகளை சந்தித்து வந்த நயன்தாரா அவற்றில் இருந்த பாடம் கற்றுக்கொண்டு மீண்டும் அந்த விஷயங்களை செய்யக்கூடாது என்று ஒரு நிலைப்பாட்டை எடுத்துள்ளார். மேலும் நயன்தாராவுக்கு எப்போது திருமணம் நடக்கும் என கோடம்பாக்கமே எதிர்பார்த்துக் கொண்டிருந்தது.
அவற்றுக்கெல்லாம் ஒரு விடிவு காலமாக இந்த மாதம் இயக்குனர் விக்னேஷ் சிவனை நயன்தாரா திருமணம் செய்து கொண்டார். நயன்தாரா விக்னேஷ் சிவனை சந்தித்ததில் இருந்தே அவருடைய நடவடிக்கை பல மாறியுள்ளது. பல விஷயங்கள் விக்னேஷ் சிவன் நயன்தாராவிற்கு அறிவுரை கூறியுள்ளார்.
அதுபடிதான் நயன்தாராவும் தற்போது நடந்து வருகிறார். மேலும் நயன்தாரா நெல்சனின் கோலமாவு கோகிலா படத்தில் நடிப்பதற்கும் விக்னேஷ் சிவன் தான் காரணம். மேலும் நயன்தாரா நடிக்கும் ஒவ்வொரு படத்தின் கதையையும் விக்னேஷ் சிவனும் கேட்டுக்கொள்வார்.
அமிர்தமும் அதிகமானால் விஷம் என்பதுபோல விக்னேஷ் சிவன் அதீத அக்கறை நயன்தாரா மீது காட்டுவது தற்போது ஒரு பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது தற்போதெல்லாம் நயன்தாரா படப்பிடிப்பில் அதிக கண்டிஷன் போட்டு வருகிறாராம்.
சமீபத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியாகியிருக்கும் O2 படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இப்படத்தில் ஒரு குழந்தைக்கு அம்மாவாக நயன்தாரா நடித்திருந்தார். இந்நிலையில் இப்படத்தில் ஒரு காட்சியில் பஸ் மண்ணில் புதைந்து விடும். அந்த காட்சி எடுக்கும்போது என் மீது மண் படக்கூடாது என நயன்தாரா ஏகப்பட்ட கண்டிஷன் போட்டாராம்.
ஆனால் இதற்கு முன் நயன்தாரா படத்திற்கு எது தேவையோ அப்படி நடித்து வந்தார். ஆனால் விக்னேஷ் சிவன் வந்த பிறகு வேறு ஒரு விதத்தில் மாறியுள்ளார் என அனைவரும் கூறிவருகின்றனர். அப்போதே இப்படி என்றால் தற்போது நயன்தாராவுக்கு கல்யாணம் ஆனதால் இன்னும் என்னென்ன கண்டிஷன் போடப் போகிறாரோ என்ற பயத்தில் இயக்குனர்கள் உள்ளார்களாம்.