சந்திரமுகி படத்தில் ஜோதிகா ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தால் மட்டுமே இந்த படம் ஓடியது என்பது நிதர்சனமான உண்மை. ஆனால் தற்போது சந்திரமுகி-2வில் ரஜினி இல்ல, இப்ப ஜோதிகாவையும் மாத்திட்டாங்க. பிரபல நம்பர் நடிகை நடன இயக்குனரான ராகவா லாரன்சுடன் ஜோடி சேர்ந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2005 ஆம் ஆண்டு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் வெளியான சந்திரமுகி திரைப்படம் பிரம்மாண்டமான வெற்றியை கொடுத்திருந்தது.
இந்நிலையில் சந்திரமுகி 2 திரைப்படத்தை இயக்குனர் பி.வாசு, நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் இயக்க உள்ளதாக கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பே முடிவு செய்து வைத்திருந்தனர். கொரோனா காலகட்டதால் இப்படம் தள்ளிப்போன நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பை கூடிய விரைவில் ஆரம்பிக்க உள்ளனர்.
ஏற்கனவே சந்திரமுகி 2 திரைப்படத்தில், நடிகை அனுஷ்கா கதாநாயகியாக நடிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில், தற்போது நடிகை த்ரிஷா சந்திரமுகி 2 திரைப்படத்தில் ராகவா லாரன்ஸுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார். மேலும் நகைச்சுவை நடிகர் வடிவேலுவும் இத்திரைப்படத்தில் இணைந்துள்ளார்.
கூடிய விரைவில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாகவும், சந்திரமுகி திரைப்படத்தைப் போலவே, சந்திரமுகி 2 திரைப்படமும் திரில்லர் கதையாக அமையும் என்றும் பி.வாசு தெரிவித்துள்ளார். மேலும் நடிகை திரிஷா ஏற்கனவே அரண்மனை 3, மோகினி உள்ளிட்ட திரைப்படங்களில் பேய் கதாபாத்திரத்தில் நடித்து இருந்த நிலையில், திரைப்படத்திலும் சந்திரமுகி கதாபாத்திரத்தில் நடிப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது நடிகை த்ரிஷா, இயக்குனர் மணிரத்னத்தின் இயக்கத்தில் வெளி வரவுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்துள்ளார்.இத்திரைப்படம் வரும் செப்டம்பர் 30ஆம் தேதி, ரிலீஸாகவுள்ள நிலையில், குந்தவை கதாபாத்திரத்தில் திரிஷா நடித்திருப்பத்தை பார்க்க ரசிகர்கள் ஆவலோடு உள்ளனர்.
மேலும் இத்திரைப்படத்தின் ரிலீசுக்கு பின் திரிஷா, சந்திரமுகி 2 திரைப்படத்தில் நடிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில்,நடிகர் ராகவா லாரன்ஸும் தற்போது ருத்ரன் திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு சந்திரமுகி 2 திரைபடத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.