லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படம் தற்போது வரை திரையரங்குகளில் வசூல் வேட்டையாடி வருகிறது. இப்படத்தில் விஜய் சேதுபதி மாறுபட்ட வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் சூர்யா ரோலக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் ஐந்து நிமிடங்கள் வந்த மிரட்டியிருந்தார்.
அனிருத் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இந்நிலையில் கிட்டத்தட்ட நான்கு வருடங்களாக கமலின் படங்கள் வெளியாகாமல் இருந்த நிலையில் அந்த இடைப்பட்ட காலத்தை போக்கும் வகையில் விக்ரம் படம் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.
இந்நிலையில் விக்ரம் படத்திற்கு பல்வேறு துறையைச் சார்ந்த பல பிரபலங்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். மேலும் தமிழ் சினிமாவைத் தாண்டி மற்ற மொழி படங்களில் நடிக்கும் ஹீரோக்களும் விக்ரம் படத்தை பாராட்டி வருகின்றனர். சமீபத்தில் கூட நடிகர் பிரித்விராஜ் விக்ரம் படத்தை பற்றி புகழ்ந்து பேசி இருந்தார்.
இந்நிலையில் தற்போது தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு விக்ரம் படத்தை பார்த்த பின்பு தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். முதலாவதாக லோகேஷ் கனகராஜை டேக் செய்த விக்ரம் படம் ஒரு பிளாக்பஸ்டர் சினிமா. இப்படத்தின் முழு செயல்முறையும் மனதை நெகிழ வைக்கிறது என குறிப்பிட்டிருந்தார்.
அதன்பிறகு அனிருத்தை டேக் செய்து இப்படத்தின் மியூசிக் ஸ்கோர் என்னை பிரம்மிக்க செய்தது. மேலும் இந்த மியூசிக் எனது பிளே லிஸ்டில் நீண்ட காலமாக முதலிடம் வகிக்கிறது என தனது சந்தோஷத்தை மகேஷ்பாபு பகிர்ந்திருந்தார். கடைசியாக கமலஹாசனை பற்றி பேசுகிறார்.
லெஜண்ட் கமலஹாசன் அவர்களின் நடிப்பை பற்றி கருத்து சொல்ல எனக்கு தகுதி இல்லை. உங்களுடைய தீவிர ரசிகன் நான் என்பதை உணரும் தருணம் இது. மேலும் உங்களுக்கும், விக்ரம் படத்தின் குழுவிற்கும் வாழ்த்துக்கள் என மகேஷ் பாபு தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.