சமீபகாலமாக தமிழ் சினிமாவில் புதிய டிரென்ட் ஒன்று விஸ்வரூபம் எடுத்துள்ளது. அதாவது படத்தின் மையக்கருத்து ஒன்றாகத்தான் இருக்கும். அதை சுற்றியே மற்ற கதையெல்லாம் அமைந்திருக்கும்படி படம் எடுக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு சமீபத்தில் ஒன்லைன் கதையை வைத்து ஜெயித்த 5 படங்களை பார்க்கலாம்.
கைதி : லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ட்ரீம் வாரியர்ஸ் தயாரிப்பில் கார்த்தி நடிப்பில் வெளியான திரைப்படம் கைதி. போதைப்பொருள் கும்பலை அளிக்கும் முயற்சி தான் இப்படத்தின் மொத்த கதையும். அதுவும் கைதி படத்தில் கதாநாயகி, பாடல், நகைச்சுவை என எதுவும் கிடையாது. தன்னுடைய திரைக்கதை மூலம் விறுவிறுப்புடன் படத்தின் இறுதி வரையும் ரசிகர்களை அழைத்துச் சென்றார் லோகேஷ்.
வலிமை : எச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் வலிமை. போதைப்பொருள் கடத்தலில் சில இளைஞர்கள் தவறாக எப்படி பயன்படுத்தப் படுகிறார்கள் என்பதை ஒரு போலீஸ் அதிகாரியாக அஜித் எப்படி கண்டு பிடிக்கிறார் என்பதே படத்தின் ஒன்லைன் கதை ஆகும். இப்படத்திற்கு எதிர்பார்த்த அளவு பாராட்டு கிடைக்கவில்லை என்றாலும் வசூல் ரீதியாக லாபம் பார்த்தது.
பீஸ்ட் : நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் பீஸ்ட். இப்படத்தில் தீவிரவாத கும்பலை ஒரு முன்னாள் ராணுவ அதிகாரியாக விஜய் எப்படி அழிக்கிறார் என்பதே பீஸ்ட் படத்தின் கதை. இப்படம் நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றாலும் வசூல் வேட்டையாடியது.
விக்ரம் : உலக நாயகன் கமல்ஹாசன், ஃபகத் பாசில், விஜய் சேதுபதி ஆகியோர் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் விக்ரம். இப்படமும் போதைப் பொருள் கடத்தலை மையமாக வைத்துதான் எடுக்கப்பட்டிருந்தது. ஆனால் லோகேஷின் வித்யாசமான கதை களத்தால் விக்ரம் படம் அதிரிபுதிரி ஹிட்டானது.
நெஞ்சுக்கு நீதி : அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான திரைப்படம் நெஞ்சுக்கு நீதி. சாதிய ஏற்றத் தாழ்வுகளைப் பற்றிய படம்தான் இது. ஒரு இந்திய குடிமகன் சாதி, மதம், இனம், பாலினம் ஆகியவற்றால் அவனின் உரிமை பாதிக்கக் கூடாது என்பதே நெஞ்சுக்கு நீதி படத்தின் ஒன்லைன் கதை ஆகும்.