ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

அரைச்ச மாவையே அரைச்சு பிரஷ்ஷா கொடுத்த முத்தையா.. புளிக்காம இருந்தா சரி, விருமன் ட்ரைலர் எப்படி இருக்கு?

சூர்யா தயாரிப்பில் கார்த்தி நடித்துள்ள விருமன் திரைப்படத்தின் டிரைலர் மதுரையில் பிரம்மாண்டமாக வெளியிடப்பட்டுள்ளது. இயக்குனர் சங்கர் வெளியிட்டுள்ள இந்த ட்ரைலரை தற்போது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். வழக்கமாக கிராமப்புறங்களில் விருமன் என்ற பெயர் அதிக புழக்கத்தில் இருக்கும்.

அதாவது எதற்கும் பயப்படாத, அனைத்தையும் தன்னுடைய கட்டுக்குள் வைத்திருக்கும் ஒரு ஆளுமையான நபருக்கு இந்த பெயர் நிச்சயம் பொருந்தும். அந்த வகையில் இந்த படத்தில் கார்த்திக்கு விருமன் என்று பெயர் வைத்திருப்பது பொருத்தமாக இருக்கிறது.

ட்ரைலரின் ஆரம்பம் முதல் முடிவு வரை பல அதிரடி சண்டை காட்சிகளும், ரசிக்கும் படியான வசனங்களும் நிறைந்துள்ளது. ஆனாலும் இந்த ட்ரெய்லரை பார்க்கும்போது படம் நிச்சயமாக கொம்பன், மருது போன்றவற்றின் சாயலில் நிச்சயம் இருக்கும் என்று தெரிகிறது.

இதில் முரட்டு கிராமத்தானாக நடித்திருக்கும் கார்த்தி வழக்கம் போல தன்னுடைய நடிப்பால் அதிர வைத்துள்ளார். டிராயர் தெரியும்படி வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு சண்டை போடுவதாக இருக்கட்டும், அப்பாவை எதிர்த்து பேசும் அடங்காத மகன் போன்ற பல இடங்களில் கார்த்தி பருத்தி வீரனை நினைவு படுத்துகிறார்.

அந்த வகையில் முத்தையா அரைத்த மாவையே அரைத்து பிரஷ்ஷாக கொடுத்திருப்பது போல் தோன்றுகிறது. மற்றபடி பாடல்கள், கத்தி பேசுறது கத்தியை காட்டி பேசுவதெல்லாம் விருமனுக்கு பிடிக்காது போன்ற வசனங்கள் அனைத்தும் ரசிக்கும் படியாக இருக்கிறது.

மேலும் கிராமத்து அழகியாக இதில் அறிமுகமாகி இருக்கும் அதிதி சங்கர் ரசிகர்களை கவர்ந்துள்ளார். அவருக்கு இந்த கிராமத்து கதாபாத்திரம் பக்காவாக பொருந்தி இருக்கிறது. அதனால் இனி இதுபோன்ற வாய்ப்புகள் அவரை தேடி வரும் என்பதில் சந்தேகம் இல்லை.

ஆனால் இதிலும் ஒரு பின்னடைவு இருக்கிறது. முதல் படத்திலேயே ரசிகர்கள் மனதில் கிராமத்து பெண்ணாக பதிந்து விட்ட அதிதி சங்கருக்கு இனி மாடர்ன் கேரக்டர்கள் வருமா என்பது கேள்விக்குறிதான். இருப்பினும் விருமன் திரைப்படத்தின் மூலம் ஒரு சரியான அஸ்திவாரத்தை அவர் போட்டுவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.

- Advertisement -

Trending News