திங்கட்கிழமை, ஜனவரி 6, 2025

இந்த வருடம் தேசிய விருது எங்களுக்குதான்.. சூரரை போற்று படத்தை நாங்கள் துவம்சம் செய்வோம்

முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்திருக்கும் படம் விருமன். இப்படத்தில் அதிதி ஷங்கர், பிரகாஷ்ராஜ், ராஜ்கிரண், சூரி, கருணாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சமீபத்தில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீடு மற்றும் ஆடியோ லான்ச் விழா மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் நடிகர் சூர்யாவும் கலந்து கொண்டார். மேலும் விருமன் படத்தை சூர்யா ஜோதிகாவின் 2டி என்டர்டைன்மென்ட் நிறுவனம் தான் தயாரிக்கிறது. அதிலும் கார்த்தியை விட சூர்யாவை தான் ரசிகர்கள் ரோலக்ஸ் என கோஷமிட்டு வரவேற்றனர். மேலும் இந்நிகழ்ச்சியில் விருமன் படத்தில் நடித்த பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் விழா மேடையில் பேசிய கருணாஸ் விருமன் படத்தைப் பற்றி சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார். மேலும் சூர்யாவின் சூரரை போற்று படத்தில் கருணாஸ் நடித்திருந்தார். இதில் அவருடைய கதாபாத்திரம் காமெடி நிறைந்த உணர்ச்சிகரமானதாக இருக்கும்.

மேலும் தற்போது கார்த்தியின் விருமன் படத்திலும் கருணாஸ் நடித்துள்ளார். இந்நிலையில் சூர்யாவுக்கு கண்டிப்பாக சூரரை போற்று படத்திற்காக தேசிய விருது கிடைக்கும் என்று ஏற்கனவே கூறினேன். நான் சொன்னது போலவே இந்த வருடம் சூர்யாவுக்கு தேசிய விருது கிடைத்தது.

மேலும் விருமன் படத்திலும் கார்த்தியின் நடிப்பு தன்னை கவர்ந்தது. சூர்யாவிற்கு சொன்னது எப்படியோ அதேபோல் கார்த்திக்கும் விருமன் படத்திற்காக தேசிய விருது கிடைக்கும். அதாவது இப்படத்தில் பிரகாஷ்ராஜ், கார்த்தி இடையே வரும் காட்சிகள் கண்டிப்பாக பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெறும்.

இதனால் இந்த ஆண்டு கார்த்திக்கு தேசிய விருது கன்ஃபார்ம் என கருணாஸ் பேசியிருந்தார். மேலும் பருத்திவீரன் தொடங்கி கிராமத்து படங்கள் என்றால் கார்த்தி பின்னி பெடல் எடுப்பார். அதிலும் விருமன் படத்தில் ஏகப்பட்ட சண்டை காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக தெரிகிறது.

Trending News