சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

நைசா கவர்ச்சி பக்கம் தாவும் அதிதி சங்கர்.. நயன்தாரா தான் ஒரே டார்கெட்

இயக்குனர் ஷங்கரின் மகள் என்ற மிகப்பெரிய அடையாளத்துடன் சினிமாவுக்குள் நுழைந்திருக்கிறார் அதிதி சங்கர். கார்த்தி நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் விருமன் திரைப்படத்தில் அதிதி சங்கர் ஹீரோயினாக அறிமுகமாகி இருக்கிறார்.

இப்படத்தில் முழுக்க முழுக்க கிராமத்து பெண்ணாகவே நடித்து இருக்கும் அதிதி தற்போது ரசிகர்களின் கனவு கன்னியாக மாறி இருக்கிறார். அந்த அளவுக்கு படம் வெளிவருவதற்கு முன்பே இவருக்கு ஏகப்பட்ட வரவேற்பு கிடைத்து வருகிறது. அது மட்டுமல்லாமல் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாக இருக்கும் மாவீரன் திரைப்படத்திலும் இவர் ஹீரோயினாக நடிக்க உள்ளார்.

மேலும் சிம்புவுக்கு ஜோடியாகவும் நடிக்க இருக்கிறார். இப்படி புயல் வேகத்தில் சென்று கொண்டிருக்கும் அதிதி சங்கர் அடுத்தடுத்த திரைப்படங்களில் கிளாமர் பக்கம் தாவ இருக்கிறாராம். தொடர்ந்து வில்லேஜ் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்தால் அதே போன்று வாய்ப்புகள் தான் கிடைக்கும் என்பதால் தான் அதிதி இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளாராம்.

அது மட்டுமல்லாமல் அவர் தற்போது கிளாமராக போட்டோ ஷூட் ஒன்றையும் நடத்திக் கொண்டிருக்கிறார். விரைவில் அவரின் கிளாமர் புகைப்படங்கள் சோசியல் மீடியாவை அலங்கரிக்க இருக்கிறது. இந்நிலையில் அதிதியின் தற்போதைய டார்கெட் நடிகை நயன்தாரா தானாம்.

தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் நயன்தாரா சமீபத்தில் தான் திருமணம் செய்து கொண்டார். பொதுவாக எவ்வளவு பெரிய ஹீரோயினாக இருந்தாலும் திருமணம் ஆகிவிட்டால் அவர்களுடைய மார்க்கெட் கொஞ்சம் கொஞ்சமாக சரிய ஆரம்பித்து விடும்.

தற்போது நயன்தாராவுக்கும் அப்படிப்பட்ட சூழல் தான் உருவாகி இருக்கிறது. இதை நன்றாக தெரிந்து கொண்ட அதிதி அவருடைய இடத்தை பிடிக்க திட்டமிட்டு வருகிறார். சினிமாவுக்கு வருவதற்கு முன்பே அதிதி பாட்டு, டான்ஸ், நடிப்பு என்று அனைத்தையும் கற்று தேர்ந்துள்ளார்.

இப்படி நம்பர் ஒன் நடிகைக்கு தேவையான அனைத்து தகுதிகளும் அவரிடம் இருப்பதால் தான் அவர் நயன்தாராவை டார்கெட் செய்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது பல ஹீரோக்கள் மற்றும் இயக்குனர்களின் பார்வையும் அதிதி பக்கம் திரும்பி இருக்கிறது. இதை வைத்து பார்க்கும் போது அவர் நிச்சயம் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என்பதில் சந்தேகம் இல்லை.

- Advertisement -

Trending News