புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

உலகநாயகன் இடத்தை பிடிக்க போட்டி போடும் 5 நடிகர்கள்.. விஜய் டிவி குறிவைக்கும் பிரபலங்கள்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். கடந்த 5 சீசன்களாக உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கினார். ஆனால் விக்ரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து கமல் நிறைய படங்கள் பண்ண போகிறார். இதனால் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்குவது கடினம். இந்நிலையில் அவருக்கு பதிலாக ஐந்து நடிகர்களை விஜய் டிவி குறி வைத்துள்ளது.

சிம்பு: கமலஹாசன் விக்ரம் படத்தின் படப்பிடிப்பில் பிசியாக இருந்தபோது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் வாய்ப்பு சிம்புக்கு கிடைத்தது. இதனால் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியை சிம்பு தொகுத்து வழங்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

அர்ஜுன்: விஜய் டிவியில் பிக்பாஸ் ஒளிபரப்பான சமயத்தில் இதற்கு போட்டியாக ஜீ தமிழில் சர்வைவர் நிகழ்ச்சி ஒளிபரப்பானது. இந்நிகழ்ச்சியை அழகாக அர்ஜுன் கொண்டு சென்றிருந்தார். இதனால் எப்படியாவது பணத்தை கொட்டிக் கொடுத்து அர்ஜூனை இழுக்க விஜய் டிவி போராடி வருகிறது.

விஜய் சேதுபதி: எப்போதுமே சன் டிவி மற்றும் விஜய் டிவியின் டிஆர்பி இடையே கடுமையான போட்டி நிலவும். அந்த வகையில் பிக்பாஸ் ஒளிபரப்பாகும் போது சன் டிவியின் டிஆர்பி அடிவாங்கும். இதனால் பிக் பாஸுக்கு போட்டியாக மாஸ்டர் செஃப் என்ற சமையல் நிகழ்ச்சியை ஒளிபரப்பு செய்தது. இந்நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார். இதனால் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்க அதிக வாய்ப்புள்ளது.

மாதவன்: நடிகர் மாதவனுக்கு ஏற்கனவே நிறைய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய அனுபவம் உள்ளது. அதிலும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதில் மாதவன் கைதேர்ந்தவர். இதனால் மாதவனை பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

ஆர்யா: கமலஹாசனை போல் நக்கலாகவும், கலகலப்பாகவும் பேசக் கூடியவர் நடிகர் ஆர்யா. சார்பட்டா பரம்பரை வெற்றிப் படத்தைத் தொடர்ந்து ஒரு சில படங்களில் ஆர்யா நடித்து வருகிறார். இந்நிலையில் விஜய்டிவி ஆர்யாவையும் குறி வைத்துள்ளது. தற்போது கைவசம் அதிக பட வாய்ப்புகள் இல்லாததால் இந்த வாய்ப்பை ஆர்யா பயன்படுத்திக் கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News