வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

கரெக்டான ரூட்டை பிடித்து மார்க்கெட்டை தக்க வைத்த 5 நடிகர்கள்.. நமக்கு என்ன வருமோ அதைத்தான் செய்யணும்

சில நடிகர்கள் அவர்கள் நடித்த 4,5 படங்கள் வெற்றி அடைந்ததும் தனக்கென ஒரு இமேஜை உருவாக்கி கொண்டு, இப்படி தான் நடிப்பேன், இந்த கதைகளில் தான் நடிப்பேன் என ஓவராக அலட்டிக் கொள்கிறார்கள். ஒரு சிலர் தான், ஓவராக அலட்டிக்கொள்ளாமல், கெத்து காட்டாமல் தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்கிறார்கள். தனக்கென்ன வருமோ அதை செய்து சினிமாவில் பிழைத்து கொள்பவர்கள்.

RJ பாலாஜி : வானொலி பண்பலைகளில் ‘கிராஸ் டாக்’ என்னும் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் RJ பாலாஜி. சுந்தர்.சி மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார். ‘தீயா வேல செய்யணும் குமாரு’ , ‘நானும் ரவுடி தான்’ திரைப்படத்திற்கு பிறகு படங்களை இயக்க ஆரம்பித்தார். ‘LKG’, ‘மூக்குத்தி அம்மன்’ ‘வீட்ல விசேஷங்க’ திரைப்படங்களை இயக்கி ஹீரோவாக நடித்தும் உள்ளார். இவர் ஹீரோவாக நடித்த போதிலும் தனக்கென எந்த கெத்தும் இல்லாமல் அவருக்கு வருவதை செய்து வருகிறார்.

Also Read: ஹாட்ரிக் கொண்டாட்டத்தில் ஆர் ஜே பாலாஜி.. போனி கபூர் என்ன கொடுத்துருக்காரு பாருங்க

சூரி: சூரி ஒரு சில படங்களில் சிறு, சிறு வேடங்களில் நடித்திருந்தாலும், சுசீந்திரன் இயக்கத்தில் ‘வெண்ணிலா கபடி குழு’ திரைப்படத்தில் வந்த பிறகே ‘பரோட்டோ சூரி’ என பெயர் பெற்றார். கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் இருந்தாலும், தனக்கென எந்த இமேஜையும் உருவாக்காமல் கொடுத்த கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

ரோபோ ஷங்கர்: ரோபோ ஷங்கர் தனியார் தொலைக்காட்சியில் பிரபலமான நிகழ்ச்சியின் மூலம் சினிமாவிற்கு வந்தவர். சேனல்களில் மிகப்பெரிய புள்ளியாக இருந்தாலும், ரோபோ அதை சினிமாவில் எந்த இடங்களிலும் காட்டிக் கொண்டது இல்லை. திரைப்படங்களில் ஒரு சில காட்சிகள் என்றாலும், ஹீரோக்களுடன் ஓரமாக நிற்கும் காதாபாத்திரம் இருந்தாலும் அதிலும் தன்னால் முடிந்ததை செய்வாரே தவிர வேறு எதையும் எதிர் பார்க்க மாட்டார்.

Also Read: இரட்டை அர்த்த வசனங்களை பேசிய ரோபோ ஷங்கர்.. கேட்டு கேட்டு ரசித்த பிரபல நடிகை

தம்பி ராமையா: தம்பி ராமையா முரளி நடித்த மனுநீதி படத்தை இயக்கியுள்ளார். மேலும் வடிவேலுவின் ‘இந்திரலோகத்தில் நா அழகப்பன்’ ‘மனியார் குடும்பம்’ திரைப்படங்களை இயக்கியுள்ளார். திரைப்படங்களை மட்டும் தான் இயக்குவேன் என இல்லாமல் தம்பி ராமையா அவரை தேடி வந்த காமெடி கேரக்டரிலும் நடிக்க தொடங்கினார். எந்த இயக்குனர் இமேஜும் காட்டாமல் காமெடியனாக கலக்கி வருகிறார்.

மனோ பாலா: இன்று காமெடியனாக கலக்கி வரும் மனோபாலா 90ஸ் களில் ஒரு இயக்குனர். தன்னுடைய முதல் படமே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து ‘ஊர்காவலன்’ படத்தை கொடுத்தார். அதன் பிறகு ‘பிள்ளை நிலா’ ‘என் புருஷன் எனக்கு மட்டும்தான்’ என நிறைய படங்களை இயக்கியுள்ளார். மனோபாலா பெரிய இயக்குனராக இருந்தாலும் இன்றைய இளைஞர்களுக்கு இணையாக அவர்களுடன் சேர்ந்து காமெடியனாக நடித்து வருகிறார்.

பல காமெடியன்கள் படங்கள் நடித்த பிறகு கெத்தாக நடிக்க வேண்டும், இமேஜை காப்பாற்ற வேண்டும் என தனக்கு என்ன வருமோ அதை மறந்து புதிதாக முயற்சி செய்து மார்க்கெட்டை இழந்து வரும் நிலையில், தனக்கு வருவதை செய்து பிழைத்து கொள்பவர்கள் புத்திசாலிகள்.

Also Read: தம்பி ராமையா அறைக்கு பக்கத்து அறையை புக் செய்த சன்னி லியோன்.. காரணம் கேட்டு அதிர்ந்து போன கோலிவுட்

Trending News