சனிக்கிழமை, டிசம்பர் 28, 2024

கேவலமாக நடந்து கொள்ளும் சிவாங்கி.. வளரவே இல்ல அதுக்குள்ள இப்படியா

தனியார் தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவியில், ஒருவர் ஒருமுறை முகத்தை காண்பித்து விட்டாலே அவர் செலிபிரிட்டி அந்தஸ்தை எட்டி விடுவர். அந்த அளவிற்கு விஜய் டிவி ஒருத்தரை பிரபலப்படுத்தி விட்டாள், அவரை வைத்து பல நிகழ்ச்சிகள் நடத்துவது, அவர்களை பிரபலப்படுத்தி சேனலின் வளர்ச்சியை அதிகப்படுத்துவர்.

இந்நிலையில் விஜய் டிவி பிரபலங்கள் பலருக்கும் சம்பளம் அதிகமென சமீபத்திய செய்திகள் வெளியாகி வைரலாகி உள்ளது. அதிலும் முக்கியமாக பிரபல தொகுப்பாளர்களான, ஈரோடு மகேஷ், பிரியங்கா உள்ளிட்டோர் துபாய் நாட்டில் வீடு வாங்கும் அளவிற்கு அவர்களது சொத்து மதிப்பு அதிகமாக உள்ளதாக அண்மையில் செய்தி வெளியாகி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

Also Read: மீண்டும் மீண்டும் கிஸ் அடிக்கும் bigg boss ரைசா யாருடன் தெரியுமா.? இதோ வீடியோ

அந்த வகையில் விஜய் டிவி பிரபலங்கள் விஜய் டிவிக்கு மட்டும் வேலை செய்யாமல், மற்ற தனியார் நிறுவனங்கள் நடத்தும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது, அவர்களோடு வெளிநாடுகளுக்கு சென்று அங்குள்ள ரசிகர்களை குஷிப்படுத்துவது என எல்லா வேலைகளிலும் ஈடுபடுவர்.

அப்படி அண்மையில் சூப்பர் சிங்கர், குக்கு வித் கோமாளி உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு தனது சுட்டித்தனமான பேச்சால் ரசிகர்களை கவர்ந்திழுத்த விஜய் டிவி பிரபலமான சிவாங்கியை , ஒரு தனியார் நிறுவனம் துபாய்க்கு அழைத்து சென்று ஒரு நிகழ்ச்சியில் பங்குபெற அழைப்பு விடுத்திருந்தது.

Also Read: கமல், விஜய், கௌதம் வாசுதேவ் மேனன் இணையும் புதிய படம்..பக்காவாக காய் நகர்த்தும் உலகநாயகன்.!

அதற்காக சிவாங்கிக்கு விமான டிக்கெட்டும் எடுத்துக் கொடுக்கப்பட்டது. ஆனால் அதற்கு சிவாங்கி எனது குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் டிக்கெட் எடுத்துக் கொடுத்தால் தான், துபாய்க்கு வந்து நிகழ்ச்சியில் பங்கேற்ப்பேன் என தெரிவித்துள்ளார். உடனே அந்த தனியார் நிறுவனமும் என்ன செய்வதென்றே தெரியாமல் சிவாங்கியின் குடும்பத்துக்கே டிக்கெட் எடுத்துக் கொடுத்துள்ளது.

சிவாங்கி தற்போது தான் வளர்ந்துவரும் பிரபலமாக உள்ளார் இப்பவே இவருக்கு இவ்வளவு சீன் எல்லாம் ஆகாது என நெட்டிசன்கள் இணையத்தில் அவரை தாளித்து வருகின்றனர். விஜய் டிவி, சிவாங்கியை அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்குபெற செய்து,அவரது முகத்தை அடிக்கடி காட்டி பிரபலப்படுத்தி வந்ததால் இப்படி எல்லாம் ஓவராக அவர் நடந்து கொள்கிறார் என பலரும் விமர்சித்து வருகின்றனர்.

Also Read: இந்திய சினிமா வரலாற்றில் அதிக விருது வாங்கிய நடிகர்.. கமலையே திகைக்க வைத்த ஜாம்பவான்

Trending News