திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

ஜெயம்ரவியால் விலக்கப்பட்டாரா சிம்பு.. சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த சம்பவம்

மணிரத்தினம் பிரம்மாண்ட பொருள் செலவு தனது கனவு படமான பொன்னியின் செல்வன் படத்தை எடுத்த முடித்துள்ளார் இப்படம் செப்டம்பர் 30ஆம் தேதி பான் இந்தியா படமாக சர்வதேச அளவில் வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தில் ஏகப்பட்ட திரை பிரபலங்கள் நடித்துள்ளனர்.

விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம் பிரபு, பார்த்திபன், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஜெயராம் மற்றும் பல பிரபலங்கள் பொன்னின் செல்வன் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கடந்த சில தினங்களாக பொன்னியின் செல்வன் படத்தில் சிம்பு நடிப்பதாக இருந்ததாக செய்திகள் வெளியானது.

Also Read :பொன்னியின் செல்வன் 2 எப்போது வெளிவரும்.? வெளிப்படையாகச் சொன்ன மணிரத்னம்

அவ்வாறு சிம்பு நடித்தால் விக்ரம் மற்றும் ஜெயம் ரவி ஆகியோர் இப்படத்தில் நடிக்க மாட்டோம் என்று கூறியதாகவும், அதனால் சிம்பு இப்படத்திலிருந்து விலகியதாக ஒரு செய்தி இணையத்தில் உலாவி வருகிறது. சமீபத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ஜெயம் ரவியிடம் இது குறித்து கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்த ஜெயம் ரவி முதலில் நான் சொன்னா கேட்கிற ஆளா மணிரத்தினம் என கூறினார். மேலும் அருகில் இருந்த கார்த்தி பத்திரிக்கையாளர்கள் பலவிதமாக எழுதுகிறார்கள், அது எல்லாமுமே உண்மையான செய்தி இல்லை என்பது போல பேசி இருந்தார்.

Also Read :சாதனை படைக்கும் பொன்னியின் செல்வன்.. சோழ சாம்ராஜ்யத்தை பெருமைப்பட வைத்த மணிரத்னம்

இந்நிலையில் இது போன்ற செய்தி இணையத்தில் வெளியானதும் சிம்பு தனக்கு போன் செய்து இவ்வாறு தவறாக ஒரு செய்தி பரவி வருகிறது இதை நினைத்து பீல் பண்ண வேண்டாம் என்று கூறியதாக ஜெயம் ரவி அந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியிருந்தார்.

சிம்புவே இதுபோன்ற ஜெயம் ரவிக்கு போன் செய்து பேசியது அவருடைய பெருந்தன்மையை காட்டுகிறது. மேலும் இதுவரை பூதாகரமாக வெடித்து வந்த இந்த செய்திக்கு ஜெயம் ரவி முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இதன் மூலம் சிம்பு பொன்னியின் செல்வன் படத்தில் தேர்வாகவில்லை என்பது உறுதியாகி உள்ளது.

Also Read :பொன்னியின் செல்வன் விழாவில் சேட்டை செய்த சித்தார்த்.. அரங்கத்தை திரும்பிப் பார்க்க வைத்த திரிஷா

Trending News