கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் தற்போது வெந்து தணிந்தது காடு திரைப்படம் வெளியாகி நல்ல வசூல் பெற்று வருகிறது. அதனால் இப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வெளிவரும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இதற்கு முன்னதாக கௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ், மேகா ஆகாஷ் நடிப்பில் என்னை நோக்கி பாயும் தோட்டா திரைப்படம் வெளிவந்தது. ஆனால் அந்த படம் சில பிரச்சனைகளின் காரணமாக கிடப்பிலேயே போடப்பட்டது. அந்த படம் ரிலீஸ் ஆக வேண்டும் என்றால் ஒரு குறிப்பிட்ட தொகை கௌதம் மேனனுக்கு தேவைப்பட்டது.
அப்போது ஐசரி கணேஷ் முன்வந்து அந்த கடனுக்கான பணத்தை கொடுத்து சில கண்டிஷன்களையும் போட்டிருக்கிறார். அதாவது தங்களுடைய நிறுவனத்திற்கு கௌதம் மேனன் தொடர்ந்து மூன்று படங்களை இயக்கி கொடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுள்ளார்.
அதற்கு சம்மதிக்க கௌதம் மேனன் ஜோஷ்வா என்ற திரைப்படத்தை இயக்கி முடித்துவிட்டார். ஆனால் அந்த படம் இன்னும் ரிலீஸ் ஆகாமல் இருக்கிறது. அதை தொடர்ந்து இரண்டாவதாக வெந்து தணிந்தது காடு திரைப்படத்தையும் எடுத்து முடித்து விட்டார். அந்த படமும் தற்போது பெரும் லாபத்தை கொடுத்துள்ளது.
அந்த வகையில் கௌதம் மேனன் ஐசரி கணேசுக்கு இன்னும் ஒரு திரைப்படம் முடித்து கொடுக்க வேண்டும். அது வெந்து தணிந்தது காடு படத்தின் இரண்டாவது பாகமா அல்லது வேறு நடிகரை வைத்து ஒரு படத்தை இயக்கி கொடுப்பாரா என்று ஒரு கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.
எப்படி இருந்தாலும் அது தயாரிப்பாளர் ஐசரி கணேஷுக்கு நிச்சயம் லாபத்தை தான் கொடுக்கும். அதனாலேயே அவர் சரியாக காய் நகர்த்தி கடனில் தத்தளித்துக் கொண்டிருந்த கௌதம் மேனனை இப்படி ஒரு கண்டிஷன் போட்டு வளைத்து இருக்கிறார்.