வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

விக்ரம் பட பாணியில் உருவாக உள்ள ரஜினியின் படம்.. கதாபாத்திரத்தை செதுக்கும் டாப் இயக்குனர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது இளம் இயக்குனரான நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தில் சிவராஜ் குமார், ஜெய், ரம்யா கிருஷ்ணன், பிரியங்கா அருள்மோகன் என பல பிரபலங்கள் நடிக்கின்றனர்.

ரஜினி எப்போதுமே ஒரு படத்தை முடித்துவிட்டு தான் அடுத்த படத்திற்கான அறிவிப்பை வெளியிடுவார். ஆனால் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போதே நெல்சன் உடன் இணைய போவதாக ரஜினி அறிவித்தார்.

Also Read : பயங்கர உற்சாகத்தில் இருக்கும் ரஜினி.. சந்தோஷத்தில் கொடுக்கப் போகும் அடுத்தடுத்த அறிவிப்பு

இந்நிலையில் தற்போது ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு நடந்த வரும் நிலையில் அடுத்த இரண்டு இயக்குனர்களை புக் செய்துள்ளார். அதாவது சிவகார்த்திகேயனின் டான் படத்தின் மூலம் இயக்குனரான சிபிச் சக்கரவர்த்தி முதல் படத்திலிருந்து 100 கோடி வசூலை பெற்று தந்துள்ளார். இதனால் சினிமாவுக்கு வந்த மிகக் குறுகிய காலத்திலேயே சிபி சக்கரவர்த்தி ரஜினி படத்தை இயக்கப் போகிறார்.

இந்தப் படத்தை லைக்கா நிறுவனம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரிக்க உள்ளது. சிபிச் சக்கரவர்த்தி படத்தை தொடர்ந்து ரஜினி அடுத்ததாக தேசிங்கு பெரியசாமி இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார். இவர் துல்கர் சல்மானின் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கியிருந்தார். இந்தப் படத்தில் நூதனமான திருட்டை நகைச்சுவையாக கூறியிருந்தார்.

Also Read : ஜெயிலர் படத்தில் இருக்கும் 2 முக்கிய கேரக்டர்கள்.. ரஜினிக்கு இணையாக இருக்கும் பவர்ஃபுல் கதாபாத்திரங்கள்

இந்த சூழலில் கலைபுலி எஸ் தாணு தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் ரஜினி நடிப்பில் ஒரு படம் உருவாக இருக்கிறது. இப்படத்தின் கதையை தேசிங்கு பெரியசாமி தாணுவிடம் சொல்லி இருக்கிறார். கதை தாணுக்கு ரொம்ப பிடித்த உள்ளதாம். மேலும் இந்த படம் ஒரு கேங்ஸ்டர் கதையில் உருவாக உள்ளாம்.

அதாவது சமீபத்தில் கமலஹாசன் நடிப்பில் மாபெரும் வெற்றி பெற்ற விக்ரம் பட சாயலில் இந்த படம் உருவாக உள்ளது. மேலும் பல முன்னணி நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடிக்க உள்ளதால் ஒரு மல்டி ஸ்டார் படமாக தேசிங்கு ராஜா எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் இந்தப் படத்தில் யார் யார் நடிக்க போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

Also Read : ரஜினியை வைத்து பல லட்ச ரூபாய் மோசடி.. இந்த பொழப்புக்கு எங்கேயாவது போய் பிச்சை எடுங்க

Trending News