செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

அநியாயம் பண்ணும் ஆர்யா.. விழி பிதுங்கி நிற்கும் தயாரிப்பாளர்

ஆர்யாவின் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படங்கள் எதுவும் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. கடைசியாக இவர் நடித்திருந்த சார்பட்டா பரம்பரை படத்திற்கு ஏகப்பட்ட பாராட்டுக்கள் குவிந்தது.

ஆனால் அதன் பிறகு வெளிவந்த எனிமி, கேப்டன் ஆகிய திரைப்படங்கள் வசூல் ரீதியாக பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. இந்நிலையில் அவர் கொம்பன் முத்தையா உடன் இணைந்து ஒரு திரைப்படத்தில் பணிபுரிய இருக்கிறார். இது குறித்த அறிவிப்பு வெளியான நிலையில் இந்த படத்திற்காக ஆர்யா வாங்கிய சம்பளம் பலரையும் அதிர வைத்துள்ளது.

Also read:பக்கா கிராமத்தானாக மாறும் ஆர்யா.. எதிர்பார்ப்பை மிஞ்சிய அடுத்த பட அப்டேட்

முதலில் ஆர்யா, முத்தையா கூட்டணியை வைத்து கமல் தான் இந்த திரைப்படத்தை தயாரிக்க இருந்தார். ஆனால் ஆர்யா கோடி கணக்கில் சம்பளம் கேட்டதால் அவருக்கும் கமலுக்கும் இடையே சில மனஸ்தாபங்கள் ஏற்பட்டது. அதனால் கமல் இந்த படத்தை தயாரிக்கும் முடிவை கைவிட்டார்.

அதன் பிறகு வேறு ஒரு தயாரிப்பாளருடன் ஆர்யா கை கோர்த்தார். தற்போது அந்த தயாரிப்பு நிறுவனம் ஆர்யா முத்தையாவின் கூட்டணியில் படத்தை தயாரிக்க இருக்கிறது. இதற்கான பூஜையும் போடப்பட்டு சூட்டிங் ஆரம்பமாகி இருக்கிறது.

Also read:பரமபதம் விளையாட்டு போல் மாறிய ஆர்யாவின் சினிமா கேரியர்.. ஒரே படத்தால் அதல பாதாளத்திற்கு சென்ற சம்பவம்

இதுவரை பெரிய அளவில் ஹிட் கொடுக்காத ஆர்யா இந்த படத்திற்காக 14 கோடி ரூபாய் சம்பளம் கேட்டு இருக்கிறார். இது தயாரிப்பாளரை அதிர்ச்சியடைய வைத்தாலும் அவர் வேறு வழியில்லாமல் இந்த சம்பளத்தை கொடுக்க சம்மதித்திருக்கிறார்.

ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக சித்தி இதானி நடிக்கிறார். கிராமத்து கதையாக உருவாகும் இந்த திரைப்படம் ஆர்யாவுக்கு மிகப்பெரிய திருப்புமுனை ஏற்படுத்தும் என்று பட குழு கூறியுள்ளது.

Also read:கெஞ்சி கதறியும் இரக்கம் காட்டாத கமல்.. பெரும் நஷ்டத்தை சந்தித்த விவேக்

Trending News