புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

பெரிய ஹீரோக்கள் எனக்குத் தேவையில்லை.. தோனி தேர்வு செய்த தமிழ் பிக்பாஸ் நடிகர்

கிரிக்கெட்டில் தன்னுடைய ஹெலிகாப்டர் ஷாட்டின் மூலம் ரசிகர்களை கவர்ந்து இழுத்தவர் தான் மகேந்திர சிங் தோனி. கிரிக்கெட்டின் உலக கோப்பை இந்தியாவுக்கு ஒரு பெரிய நிறைவேறாத கனவாக இருந்த போது, 2011 ஆம் ஆண்டு இவரது தலைமையில் இந்திய அணி உலக கோப்பையை வென்று ரசிகர்களுக்கு பரிசளித்தது. வெற்றியிலும், தோல்வியிலும் கூட எந்த ஒரு உணர்வுகளையும் வெளிப்படையாக காட்டாமல் புன்முறுவலுடன் சுற்றி வரும் தோனி ரசிகர்களால் கேப்டன் கூல் என்று அழைக்கப்படுகிறார்.

ஐ பி எல் தொடரில் மகேந்திர சிங் தோனி சென்னை அணிக்கு தேர்ந்து எடுக்கப்பட்டதோடு, தென்னிந்திய மக்களுக்கு இன்னும் இணக்கமானார். இந்திய கிரிக்கெட் அணிக்கும், சென்னை ஐ பி எல் அணிக்கும் பல வெற்றிகளை பெற்று தந்த இவர் 2019 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற 50 ஓவர் போட்டிக்கு பிறகு எந்த போட்டிகளிலும் பங்கேற்காமல் இருந்த வேளையில் அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

Also Read: என்ன ஜென்மம் டா நீ கைய கடிக்கிற, கட்டிப்பிடிக்கிற.. காமவெறியில் அடுத்தடுத்து வெளிவரும் அசலின் வீடியோ

ஓய்வு அறிவித்த போதிலும் தொடர்ந்து சென்னை அணிக்காக விளையாடி கொண்டிருக்கும் தோனி இந்த ஆண்டு ஐ பி எல் போட்டிகளின் போது சென்னையில் தன்னுடைய ஓய்வை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தோனி ஓய்வுக்கு பிறகு என்ன செய்வார் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் இவர் சினிமா தயாரிப்பு நிறுவனம் தொடங்கி இருக்கிறார்.

இந்த பேனரில் ரஜினி, விஜய் என பெரிய ஹீரோக்கள் நடிப்பார்கள் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தோனி பிக்பாஸ் சீசன் 1 பிரபலம் ஹரிஷ் கல்யாணை வைத்து படம் தயாரிக்க இருக்கிறார். டாப் ஹீரோக்கள் எல்லாம் அதிகமான சம்பளம் கேட்பதே தோனியின் இந்த முடிவுக்கு காரணம்.

Also Read: ஜிபி முத்து பிக்பாஸ் வீட்டில் மொத்தமாக வாங்கிய சம்பளம்.. 14 நாட்களுக்கு இவ்வளவா?

ஹரிஷ் கல்யாண் தமிழில் சிந்து சமவெளி, பொறியாளன் படங்களில் நடித்திருந்தாலும், விஜய் டிவியின் பிக்பாஸ் சீசன் ஒன்றில் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக வந்த பிறகு தான் ரசிகர்களால் அடையாளம் காணப்பட்டார். அதன் பின்னர் பியார் பிரேமா காதல், இஸ்பேட் ராஜாவும் இதயராணியும், தாராள பிரபு படங்களில் நடித்தார். சமீபத்தில் திருமணத்தை பற்றி அறிவித்திருந்த ஹரிஷ் கல்யாணுக்கு இது கல்யாண பரிசாகவே அமைந்து விட்டது.

தோனி எண்டர்டெயின்மெண்ட் என்னும் பெயரில் தொடங்கப்பட்டு இருக்கும் இந்த தயாரிப்பு நிறுவனத்தை அவருடைய மனைவி சாக்சி தோனி நிர்வகிக்க இருக்கிறார். ஏற்கனவே தோனியின் பேனரில் பாலிவுட் படங்கள் வந்து இருக்கின்றன. ஆனால் தற்போது கேப்டன் கூல் முழுக்க தென்னிந்திய படங்களை மட்டுமே தயாரிக்க முடிவு செய்து இருக்கிறார்.

Also Read: ஜி பி முத்துக்கு பதிலாக களமிறங்கும் முரட்டு போட்டியாளர்.. அட இவரு லோகேஷோட செல்ல பிள்ளை ஆச்சே

Trending News