ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

30 வருடங்களுக்குப் பிறகு ரஜினியுடன் இணையும் ப்ரொபஷனல் வில்லன்.. தலைவர் 170 தரமான ஸ்கெட்ச் போட்ட சிபி சக்கரவர்த்தி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. மேலும் விரைவில் இப்படம் முடியும் தருவாயில் உள்ளதால் ரஜினி தலைவர் 170 படத்தில் நடிக்க உள்ளார்.

சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் உருவாக உள்ள இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. இந்தப் படத்திற்கான பூஜை வருகின்ற சனிக்கிழமை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இப்படத்தில் நடிக்க உள்ள முக்கிய பிரபலங்களின் பெயரும் வெளியாகி உள்ளது.

Also Read :மெல்ல மெல்ல ரஜினி இடத்தை பிடிக்கும் தளபதி.. ஜப்பான், அமெரிக்கா மார்க்கெட்டை பிடிக்கும் விஜய்

அதாவது கிட்டத்தட்ட 30 வருடங்களுக்குப் பிறகு ரஜினியுடன் பிரபல ப்ரொபஷனல் வில்லன் கூட்டணி போட உள்ளார். ஆரம்பத்தில் ஹீரோவாக கலக்கி வந்த அரவிந்த்சாமி தற்போது வில்லனாக மிரட்டி வருகிறார். இவருடைய தோணி, பேச்சி என அனைத்தும் வில்லனுக்கே உண்டான பாணில் உள்ளதால் ப்ரொபஷனல் வில்லனாக பார்க்கப்படுகிறார்.

இந்நிலையில் ரஜினி, மம்முட்டி நடிப்பில் வெளியான தளபதி படத்தில் அரவிந்த்சாமி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது 30 வருடங்களுக்குப் பிறகு சிபிச் சக்கரவர்த்தி இயக்கும் படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்த உள்ளார்.

Also Read :பொன்னியின் செல்வன், விக்ரமுக்கு செக் வைக்கும் ரஜினி.. அதிகாரப்பூர்வமாக 2 குட் நியூஸ் வெளியிட்ட சூப்பர் ஸ்டார்

மேலும் இந்த படத்தில் வைகைப்புயல் வடிவேலும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் தலைவர் 170 படத்தில் பக்காவாக ஸ்கெட்ச் போட்டு ஒவ்வொரு நட்சத்திரங்களையும் சரியான ஆட்களாக தேர்ந்தெடுத்த வருகிறார் இளம் இயக்குனர் சிபிச் சக்கரவர்த்தி.

இதனால் வேற லெவல் காம்போவில் ரஜினி, சிபிச் சக்கரவர்த்தி கூட்டணியில் உருவாகும் படம் இருக்கும் என கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்த ரஜினி அடுத்ததாக மணிரத்தினம் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக அண்மையில் தகவல் வெளியானது.

Also Read :காந்தாரா ஹீரோக்கு போன் போட்ட ரஜினி.. வாய்ப்பை வைத்து பக்காவாக ஸ்கெட்ச் போட்ட இயக்குனர்

Trending News