திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

எகிறிய சன், விஜய் டிவி டிஆர்பி ரேட்டிங்.. நீண்ட நாட்களுக்கு பின் விட்ட இடத்தை பிடித்த பாரதிகண்ணம்மா

சின்னத்திரை ரசிகர்கள் எந்த சீரியலை விரும்பி பார்க்கிறார்கள் என்பதை அந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் தெரிந்துவிடும். அந்த வகையில் கடந்த வார டிஆர்பி ரேட்டிங் லிஸ்ட் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாக பரவுகிறது. அதிலும் விஜய் டிவியின் பாரதிகண்ணம்மா நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் விட்ட இடத்தை பிடித்து டாப் லிஸ்டில் இடம் பெற்றிருப்பது கூடுதல் சிறப்பாக பார்க்கப்படுகிறது.

மேலும் இதில் வழக்கம்போல் சன் டிவியின் கயல் சீரியல் முதல் இடத்தையும், சுந்தரி சீரியல் 2ம் இடத்தையும் பெற்றிருக்கிறது. 3-வது இடம் பாசமான அண்ணன் தங்கையின் பாசப் போராட்டத்தை வெளிக்காட்டும் வானத்தைப்போல சீரியலுக்கும், 4-வது இடம் கண்ணான கண்ணே சீரியலும் பெற்றிருக்கிறது.

Also Read: மாயாண்டி குடும்பத்தாரை மிஞ்சிய பாண்டியன் ஸ்டோர்ஸ்.. அண்ணன் தம்பி பாசமுன்னா இப்படித்தான் இருக்கணும்

5-வது இடம் விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலுக்கு கிடைத்துள்ளது. இந்த சீரியலில் கடந்த சில நாட்களாகவே விறுவிறுப்பு கூடுதலாக காட்டி ரசிகர்களை வசப்படுத்துகின்றனர். இதைத்தொடர்ந்து 6-வது இடம் நீண்ட நாட்களுக்குப் பிறகு பாரதிகண்ணம்மா சீரியல் பெற்றிருக்கிறது.

இதில் வெண்பாவின் திருமணம் யாருடன் நடக்கப்போகிறது என பரபரப்பான சூழ்நிலையை கடந்த வாரம் முழுவதும் ஒளிபரப்பியதால் சின்னத்திரை  ரசிகர்களும் இதை விரும்பி பார்த்தனர். கடைசியில் ரோகித்துடன் வெண்பாவிற்கு திருமணம் நடத்தது.

Also Read: வெண்பா கழுத்திற்கு வந்த அருவாள்.. மௌனராகம் கதை போல பாரதிகண்ணம்மாவில் நடந்த ட்விஸ்ட்

இதன் பின் பாரதிக்கு டிஎன்ஏ டெஸ்ட் ரிப்போர்ட் எப்போது கிடைக்கும் என்பதையும், அதை பார்த்த பிறகு பாரதியின் ரியாக்சன் எப்படி இருக்கும் என்பதை பார்க்க ரசிகர்களும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். ஆகையால் இந்த சீரியலை அனுதினமும் சின்னத்திரை ரசிகர்கள் தவறாமல் பார்க்க துவங்கியதால் டிஆர்பி-யில் பாரதிகண்ணம்மா சீரியல் முன்னிலை வகிக்கிறது.

இதன்பின் மீண்டும் சன் டிவியின் ரோஜா சீரியல் 7-ம் இடத்தையும், ஆனந்த ராகம் சீரியல் 8-ம் இடத்தையும், எதிர்நீச்சல் 9-வது இடத்தையும் பெற்றுள்ளது. 10-வது இடம் நான்கு அண்ணன் தம்பிகளின் பாசப்பிணைப்பை வெளிக்காட்டும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பெற்றுள்ளது.

Also Read: உண்மையை போட்டு உடைத்த கண்ணம்மா.. கதி கலங்கி போய் நிற்கும் பாரதி குடும்பம்

Trending News