திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

ரசிகர்களை ஏமாற்றும் அஜித், அனிருத் கூட்டணி.. இன்னும் எத்தனை நாளு இப்படி உருட்ட போறீங்க!

நடிகர் அஜித்துக்கென்று ஒரு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது என அனைவரும் அறிந்ததே. இவருடைய ஒவ்வொரு படத்திற்கும் கோடிக்கணக்கான ரசிகர்கள் காத்து கிடக்கின்றனர். இவர் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் வலிமை திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இதை தொடர்ந்து அஜித் மீண்டும் ஹெச் வினோத் இயக்கத்தில் துணிவு என்னும் திரைப்படத்தில் இணைந்திருக்கிறார். இதை மீண்டும் போனி கபூர் தயாரித்து இருக்கிறார். இதில் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி,பிக்பாஸ் அமீர்,பவானி ரெட்டி ஆகியோர் நடித்திருக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் ஹைதிராபாத்தில் நடைபெற்றது.

Also Read: விஜய், அஜித்தை மீண்டும் ஆட்சி செய்ய வரும் 39 வயது நடிகை.. நயன்தாராவின் நம்பர் ஒன் இடத்திற்கு வச்ச ஆப்பு

துணிவு படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் திரையிட இருக்கிறது. படம் பொங்கலன்று ரிலீஸ் ஆகும் என கடந்த வாரம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. கிட்டத்தட்ட 8 வருடங்களுக்கு பிறகு அஜித் படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆவது மட்டுமின்றி அதே 8 வருடங்களுக்கு பிறகு விஜய் படத்துடன் மோதுகிறது. விஜய் நடித்த வாரிசு திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என்று தீபாவளியன்று அறிவிப்பு வெளியானது.

விஜய் நடிக்கும் வாரிசு திரைப்படத்தின் அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளியாகி கொண்டிருக்க, துணிவு படம் ரிலீஸ் தேதி அறிவிப்போடு கிணற்றில் போட்ட கல்லாக கிடக்கின்றது. இதற்கிடையில் வாரிசு திரைப்படத்தில் பர்ஸ்ட் சிங்கிள் பாடலான ‘ரஞ்சிதமே’ லிரிக்கல் வீடியோ சில தினங்களுக்கு முன் ரிலீஸ் ஆகி மில்லியன் வியூஸ்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது.

Also Read: AK-62 ரிலீஸ் தேதியை லாக் செய்த விக்னேஷ் சிவன்.. உங்க ஸ்பீடு புரியுது ஆனா லோகேஷ் இருக்காரு பார்த்து

இந்நிலையில் கடந்த நவம்பர் 4 ஆம் தேதி, துணிவு படத்தின் இசையமைப்பாளர் ஜிப்ரான், துணிவு படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விரைவில் வெளியாக உள்ளதாகவும், இந்த பாடலை அனிருத் பாடியிருப்பதாகவும், மேலும் இந்த பாடலுக்கு சில்லா சில்லா என பெயரிடப்பட்டுள்ளதாகவும் கூறினார். ரசிகர்களும் இந்த பாடலின் அப்டேட்டுக்காக தவம் கிடக்கின்றனர்.

இந்த பாட்டின் ரிலீஸ் தேதியை இனிதான் முடிவு செய்து சனி அல்லது ஞாயிற்றுக்கிழமை அறிவிப்பார்களாம். இப்போது துணிவு படத்தின் அப்டேட்டும், வலிமை அப்டேட் போல ஜவ்வாய் இழுக்க ஆரம்பித்துவிட்டது. இந்த படத்தில் மொத்தம் மூன்று பாடல்கள் இருக்கின்றன. பாடல்கள் எப்படி என்று ரிலீஸ் ஆனால் தான் தெரியும்.

Also Read: ஐஸ்வர்யா ராயும் இல்ல, நயன்தாராவும் இல்ல.. அஜித்க்கு 5ம் முறையாக ஜோடியாகும் இளவரசி

Trending News