விஜய் கூட மோதியே தீருவேன்.. இயக்குனரை துணிவுடன் விரட்டிப் பிடிக்கும் அஜித்

நடிகர் அஜித்துக்கென்று ஒரு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது என அனைவரும் அறிந்ததே. இவருடைய ஒவ்வொரு படத்திற்கும் கோடிக்கணக்கான ரசிகர்கள் காத்து கிடக்கின்றனர். இவர் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் வலிமை திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இதை தொடர்ந்து அஜித் மீண்டும் ஹெச் வினோத் இயக்கத்தில் துணிவு என்னும் திரைப்படத்தில் இணைந்திருக்கிறார். இதை மீண்டும் போனி கபூர் தயாரித்து இருக்கிறார். இதில் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி,பிக்பாஸ் அமீர்,பவானி ரெட்டி ஆகியோர் நடித்திருக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் ஹைதிராபாத்தில் நடைபெற்றது.

துணிவு படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் திரையிட இருக்கிறது. படம் பொங்கலன்று ரிலீஸ் ஆகும் என கடந்த வாரம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. கிட்டத்தட்ட 8 வருடங்களுக்கு பிறகு அஜித் படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆவது மட்டுமின்றி அதே 8 வருடங்களுக்கு பிறகு விஜய் படத்துடன் மோதுகிறது. விஜய் நடித்த வாரிசு திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என்று தீபாவளியன்று அறிவிப்பு வெளியானது.

இதற்கிடையில் தற்போது இந்த படம் ரிலீஸ் ஆவதில் மிகப்பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதாவது துணிவு திரைப்படம் ஏற்கனவே தீபாவளிக்கு ரிலீஸ் ஆக வேண்டியது. ஆனால் படப்பிடிப்பு வேலைகள் முடிவடையாததால் தேதி தள்ளி வைக்கப்பட்டது. இப்பொழுது டப்பிங் வேலைகள் முடிந்துவிட்டாலும் படத்தில் சிஜி ஒர்க் அதிகம் இருப்பதால் முடிக்க முடியாமல் திணறி வருகிறது. இதனால் இயக்குனர் கால அவகாசம் வேண்டும் எனவும், பொங்கலுக்கு வெளியிட வேண்டாம் என்று தயாரிப்பாளரிடம் கேட்டுள்ளார்.

இதேபோல் அஜித்திடம் கேட்கும்போது அவர் மிக கோபமாக முடியவே முடியாது பொங்கலன்று படம் வெளிவந்தே ஆகவேண்டும். எனது வேலைகளை நான் இரவு பகலாக முடித்து தருகிறேன். அதேபோல் சிஜி ஒர்க் ஐ நீங்கள் ஒன்று அல்லது நான்கு கம்பெனிகளிடம் பகிர்ந்து கொடுத்து வேலையை வேகமாக முடியுங்கள் பொங்கலுக்கு ரிலீஸ் பண்ணியே ஆகவேண்டும் என்று காட்டமாக கூறியுள்ளார்.

இந்த முறை விஜயுடன் மோதியே தீர வேண்டும் என்ற முடிவில் அஜித் இருப்பது போல் தெரிகிறது. நொந்து போய் இருக்கும் தன்னுடைய ரசிகர்களுக்கு தீனி போட்டே ஆக வேண்டும் என்று உறுதியாக இருக்கிறார். எது எப்படியோ ஒரே தேதியில் படங்களை ரிலீஸ் செய்ய இரண்டு படக்குழுக்களுமே தீவிரமாக யோசித்து வருகின்றனர் என நன்றாகத் தெரிகிறது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →