சிம்புக்கு நடுவில் போதாத காலம் என்று தான் சொல்ல வேண்டும். சொந்த வாழ்க்கை, திரை வாழ்க்கை என எல்லாவற்றிலும் ஏகப்பட்ட பிரச்சனை. தொடர்ந்து சிம்புவின் படங்கள் படு தோல்வி அடைந்து வந்தது. தனது ரசிகர்கள் கொடுத்த உத்வேகத்தால் மீண்டும் பழையபடி மாஸ் ஹீரோவாக மாறி உள்ளார்.
அதுவும் மாநாடு பட விழாவில் ரசிகர்கள் முன் கண்ணீர் விட்டு தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். இதைத்தொடர்ந்து மாநாடு, வெந்து தணிந்தது காடு என தொடர் வெற்றி படங்களை சிம்பு கொடுத்து வருகிறார். அடுத்ததாக பத்து தல, கொரோனா குமார் ஆகிய படங்களையும் கைவசம் வைத்துள்ளார்.
ஆரம்பத்தில் சிம்பு என்றாலே ஒரு லவ்வர் பாய், அவர் காதல் படத்தில் தான் நடிப்பார் என்று முத்திரை குத்தப்பட்டது. அதுமட்டுமின்றி ஏகப்பட்ட சர்ச்சைகளிலும் சிம்பு சிக்கியிருந்தார். ஆனால் இப்போது அதை எல்லாம் கொஞ்சம் ஒதுக்கி வைத்து விட்டு கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
இப்போது வேதாளம் போல மீண்டும் சிம்பு முருங்கை மரம் ஏறி உள்ளார். அதாவது முருகன் இயக்கத்தில் சைக்கோ திரில்லர் ஜானரில் எடுக்கப்பட்ட சிம்புவின் படம் மன்மதன். இந்த படத்தில் பெண்களை கொலை செய்யும் கொடூர கதாபாத்திரத்தில் சிம்பு நடித்திருந்தார்.
இப்போதைய காலகட்டத்தில் இதுபோன்ற படங்களை தவிர்த்து வந்த சிம்பு மன்மதன் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கவிருக்கிறாராம். அந்தப் படத்தை இவரே இயக்கி, நடிக்கவும் இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இது சிம்புவின் 50 வது படமாக இருக்கும் என கணிக்கப்படுகிறது.
இப்போது கெத்தான கதாபாத்திரத்தில் நடித்து வந்து ஓரளவு விட்ட மார்க்கெட்டை சிம்பு பிடித்துள்ளார். இந்த நேரத்தில் மன்மதன் 2 படத்தால் அவரது மார்க்கெட் சரியும் என்று சிலர் கூறி வருகிறார்கள். ஆனால் சிம்பு எந்த எண்ணத்தில் இந்த படத்தை மீண்டும் கையில் கெடுக்கிறார் என்பது அவருக்கு மட்டுமே தெரியும்.