ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

பிக்பாஸ் ஓட்டில் நடந்த குளறுபடி.. அநியாயமாக வெளியேறும் போட்டியாளர்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் வார இறுதியில் வாக்கு எண்ணிக்கைகளின் படி வெளியேற்றப்படுவார்கள். அந்த வகையில் சென்ற வாரம் குயின்சி வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் நேற்று ராம் குறைவான ஓட்டுகளை பெற்று நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார்.

இந்த வாரம் டபுள் எவிக்சன் என்பதால் இன்று ஆயிஷா வீட்டை விட்டு வெளியேற்றப்பட இருக்கிறார். ஆனால் உண்மையில் இந்த வார ஓட்டு எண்ணிக்கையின் படி ஜனனிக்கு தான் குறைவான ஓட்டுகள் கிடைத்திருக்கிறது. ஆனால் சில சூழ்ச்சிகளின் காரணமாக அவர் தொடர்ந்து வீட்டில் தங்க வைக்கப்பட்டு இருக்கிறார்.

Also read: அதிர்ஷ்டத்தால் தப்பித்த போட்டியாளர்.. ஆண்டவரின் அதிரடியால் மிரண்டு போன ஹவுஸ் மேட்ஸ்

அவருக்கு பதிலாக அதிக ஓட்டுகள் பெற்றிருக்கும் ஆயிஷா இன்று வீட்டை விட்டு வெளியேற இருக்கிறார். ஆரம்ப நாட்களில் இவர் அடாவடி பேச்சு, திமிரு ஆகியவை மூலம் ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்தார். ஆனால் போகப் போக அவருடைய நடவடிக்கைகள் ரசிகர்களை கவர ஆரம்பித்தது. இதனால் அவருக்கான ஓட்டுகளும் கணிசமாக அதிகரித்தது.

இந்நிலையில் அவர் வீட்டை விட்டு வெளியேற இருக்கும் செய்தி ரசிகர்களை கடும் அதிர்ச்சியாக்கி இருக்கிறது. மேலும் ஓட்டு எண்ணிக்கை பற்றி சோசியல் மீடியாவில் கருத்து தெரிவித்து வரும் ரசிகர்கள் ஜனனியை வெளியே அனுப்புங்கள் என்றும் கூறி வருகின்றனர். இப்படி அவர் காப்பாற்றப்பட்டதற்கு பின்னால் விஜய் டிவியின் சதி வேலையும் இருக்கிறது.

Also read: ராம் பிக் பாஸில் வாங்கிய சம்பளம்.. ரகுவரன் கெட்டபுக்காகவே வாரி வழங்கிய விஜய் டிவி

அதாவது ஒருவேளை ஜனனி வெளியேற்றப்பட்டால் இலங்கை மக்களின் ஆதரவு இந்த நிகழ்ச்சிக்கு கிடைக்காது என்பதால் தான் இப்படி அநியாயமாக ஆயிஷா வெளியேற்றப்பட்டுள்ளார். எப்போதுமே டிஆர்பிக்காக எதை வேண்டுமானாலும் செய்யும் விஜய் டிவி இந்த முறை ஆயிஷாவை பலியாடாக மாற்றி இருக்கிறது. ஆனால் ரசிகர்கள் இதை எதிர்த்து குரல் கொடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் சோசியல் மீடியாவில் வி லவ் ஆயிஷா என்ற ஹாஷ்டேக்குகள் இப்போது ட்ரெண்ட் ஆகி வருகிறது. மேலும் ஆயிஷாவுக்கு எங்கள் ஆதரவு எப்போதும் இருக்கும் என்றும் அவர் ஒரு சிறந்த போட்டியாளர் என்றும் ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர். எப்போதுமே நியாயமாக பேசும் ஆண்டவர் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார் என்ற கேள்வியையும் எழுப்ப ரசிகர்கள் மறக்கவில்லை.

Also read: மைனாவுக்கு லட்சக்கணக்கில் வாரி கொடுக்கும் பிக்பாஸ்.. ஒரு நாள் சம்பளமே இவ்வளவா!

Trending News